பக்கம் எண் :

42

  தங்களைப் படிப்பிக்கும்படி பெண்கள் வேண்டுதல்
  ராகம் - மோகனம்] [தாளம் - ஆதி
  பல்லவி
  கேளும்-புமான்களே-கிருபைவைத்
தாளும் சீமான்களே
  அநுபல்லவி
  நாளுங் கதியில்லா எங்கள்மேல் வர்மமோ
தாளுறுந் தூசிபோல் தள்ளுதல் தர்மமோ (கேளும்)
  சரணங்கள்
  காலைக்கு மாலைக்கு மூலைக்குள் எங்களை
ஆலைக் கரும்புபோல் தேய்த்தீர்-பாக
சாலைக்கும் மன்மத லீலைக்கும் மேவின
வேலைக்கும் எங்களை மாய்த்தீர்
மூலைக்கல்வி நாங்கள் வாசித்தா லாபத்தோ
மூடப்பெண் கொள்வீரு மக்குப்பெ ரும்பித்தோ
ஓலைக்கி ரந்தங்க ளுங்கள்பாட் டன்சொத்தோ
உமக்கென்ன காணுந் தலைமேற்றலை பத்தோ
  (கேளும்) 1
  ஆதியிற் பெண்ணாலே மேதினி யோர்களுண்
டான வகைமறந் தீரோ-பெண்
சாதி புருடனிற் பாதியென் னமனு
நீதியை யுந்துறந் தீரோ
பாதியு டலைப்ப றக்கவி டலாமோ
பாவபுண் ணியந்தெரி யாமற்கெ டலாமோ
நீதியில் லாதெம்மை நிந்தித் திடலாமோ
நிந்தித்தும்பின் னெங்களை நீர்தொட லாமோ
  (கேளும்) 2
  நாரிய ரைஒரு காரிய மில்லா
நடைப்பிண மென்றெண்ணி னீரே-தேவர்