பக்கம் எண் :

532அலை ஓசை

போய்ச் சேர்ந்தாள்.ஒரு சமயம் அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சலை நான்
கொட்டிக் கொண்டேன்.இந்த வீட்டில் பூஜை அறையில் அவள் என் காலில்
விழுந்து நமஸ்காரம் செய்து ராகவனைக் கலியாணம் செய்து கொள்ளச்
சம்மதம் கொடுக்கும்படி கேட்டாள்.அவள் என்ன சாதியோ என்னமோ என்ற
காரணத்தினால் கண்டிப்பாக முடியாது என்று சொல்லிவிட்டேன்.இப்போது
நினைத்துப் பார்த்தால் அது பெரிய தப்பு என்று தோன்றுகிறது.தாரிணியைக்
கலியாணம் செய்து கொண்டிருந்தால் என் பிள்ளை எவ்வளவோ
சந்தோஷமாக இருந்திருப்பான்.அதற்கு நான் தடையாக நின்றேன்.அந்தப்
பெண்ணின் வயிற்றெரிச்சல்தான் இப்படி என்னையும் என் பிள்ளையையும்
படுத்தி வைக்கிறது என்று தோன்றுகிறது.”

     இதைக் கேட்ட சூரியா சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
தாரிணியின் பேரில் அவனுக்குக் கோபம் வந்தது.பழைய கதை இப்படி
யெல்லாம் இருக்கும்போது ராகவன் சீதாவின் வாழ்க்கையில் தாரிணி
தலையிட்டிருக்கவே கூடாது என்று எண்ணினான்.அவளுடைய மனதிலும்
ராகவனுடைய மனதிலும் பழைய சிநேகத்தின் பாசம் இல்லையென்பது என்ன
நிச்சயம்? ஆகையால் அவர்கள் விஷயத்தில் சீதா அசூயைப் படுவதிலேதான்
என்ன தவறு?

     இவ்விதம் எண்ணிக்கொண்டே போன சூரியா சட்டென்று அந்த
எண்ணப் போக்குக்கு முட்டுக்கட்டை போட்டு நிறுத்தினான்.“மாமி!
நடந்துபோன காரியத்தைப் பற்றி, அது வேறு விதமாய் நடந்திருக்கக்கூடாதா
என்று யோசிப்பதில் என்ன பிரயோஜனம்? பிரம்மா தலையில் எழுதின
எழுத்தை யார் மாற்றி எழுத முடியும்? உங்கள் பிள்ளை
சந்தோஷமாயிருப்பதற்கு என்ன வழி என்றுதான் இனிமேல் நாம் பார்க்க
வேண்டும்.சீதாவின் வாயாடித்தனத்தைப் பற்றி நீங்கள் சொன்னதை நான்
மனதில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.அவளுக்கு என்னால் முடிந்த
வரையில் புத்திமதி சொல்லிப் பார்க்கிறேன்.நீங்களும் நல்ல முறையில்
கொஞ்சம் சொல்லிப் பாருங்கள்.டில்லிக்கு எப்போது வரப்போகிறீர்கள்?”
என்று கேட்டான்.