பக்கம் எண் :

கலியாணம் அவசியமா?533

     “ராகவனிடமிருந்து எப்போது கடிதம் வரும் என்று எதிர் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.ஆனால் டில்லிக்குப் போவதென்றால் ஒரு விதத்தில்
பயமாகவும் இருக்கிறது.புருஷன் மனைவி சண்டையில் இந்தக் குழந்தைக்கு
ஏதாவது ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று பயப்படுகிறேன்.உன்னிடம்
சொன்னால் என்ன? உனக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதான்.ஒரு தடவை
சீதா இந்தப் பச்சைக் குழந்தையிடம் ஏதோ அப்பாவிடம், ‘அம்மாவை
வையாதே, அடிக்காதே!’ என்று சொல்லியிருக்கிறாள்.அவனும்
முரட்டுத்தனமாகத் தன் கோபத்தை இந்தக் குழந்தையிடம் காட்டி இரண்டு
அடி அடித்துவிட்டான்.குழந்தைக்குச் சுரம் வந்துவிட்டது....”

     “ஐயோ!” என்றான் சூரியா.

     “நீ ‘ஐயோ’ என்று பரிதாபப்படுகிறாயல்லவா? ஆனால் சீதா என்ன
செய்தாள் தெரியுமா? குழந்தைக்குச் சுரம் என்பதை மூன்று நாள் வரையில்
ஒருவரிடமும் சொல்லவில்லை.அப்புறம் ராகவனுக்கு எப்படியோ தெரிந்து
டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தான்.குழந்தை பிழைப்பது புனர் ஜன்மம்
ஆகிவிட்டது.உன் அத்தங்காளின் ராட்சசத்தனத்தைப் பார்த்தாயல்லவா?
என்றாள்.

     சூரியாவின் மனதிற்குள் அது சீதாவின் ராட்சசத்தனமா, அல்லது தன்
புருஷனைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால்
அப்படிச் செய்தாளா என்ற சந்தேகம் தோன்றியது.அதைப் பற்றிக் காமாட்சி
அம்மாளிடம் வாதிப்பதில் பயனில்லை என்று தீர்மானித்து, “போனதெல்லாம்
போகட்டும்.நான் நாளைக் காலை டில்லி புறப்படுகிறேன்.டில்லி போய்ச்
சேர்ந்ததும் சீதாவைப் பார்த்துப் பேசிவிட்டு உங்களுக்குத் தகவல்
தெரிவிக்கிறேன்.எப்படியாவது தகராறைத் தீர்த்து வைத்து உங்கள்
பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் நன்றாயிருக்கும்படி செய்வோம்!” என்றான்.

     “நானும் அதற்காகவேதான் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்
கொண்டிருக்கிறேன்.சூரியா! உலகத்திலேயே அவர்கள் இரண்டு
பேரிடத்திலும் இந்தக் குழந்தை இடத்திலும்