பக்கம் எண் :

534அலை ஓசை

தான் எனக்குப் பாசம்.நீ சீதாவிடம் பேசுகிறபடி பேசு.அதோடு சீதாவின்
ஜாதகம் எங்கேயாவது கிடைக்குமா என்று பார்த்து வாங்கி அனுப்பு.
அவளுடைய ஜாதகத்தில் ஒரு வேளை ஏதாவது தோஷம் இருந்தால் அதற்கு
வேண்டிய சாந்தியைப் பண்ணச் சொல்லலாம்!” என்றாள் காமாட்சி அம்மாள்.

                 
     7. வெள்ளி வீதியிலே

     சரித்திரத்தில் புகழ் பெற்ற டில்லிமாநகருக்கு மறுபடியும் நேயர்களை
அழைத்துச் செல்ல வேண்டியதாகிறது.1943-ம் வருஷத்தின் பிற்பகுதியில்
டில்லி நகரம் அதிவிரைவாகப் பணப் பெருக்கமும் ஜனப் பெருக்கமும்
அடைந்து கொண்டு வந்தது.யுத்தம் இந்தியாவின் எல்லையை நெருங்கி வந்து
கொண்டிருந்ததை முன்னிட்டுத் தலை நகரில் யுத்த முஸ்தீப்புகள் தீவிரமாக
நடைபெற்றுக் கொண்டிருந்தன.பிரிட்டிஷ் சோல்ஜர்களும் அமெரிக்க
சோல்ஜர்களும் கூர்க்க சிப்பாய்களும் சீக்கியத் துருப்புகளும் தென் இந்திய
வீரர்களும் எங்கே பார்த்தாலும் காணப்பட்டார்கள். டாக்ஸி கார்களுக்கும்,
டோங்கா வண்டிகளுக்கும், ரிக்ஷாக்களுக்கும் கூட என்றுமில்லாத கிராக்கி
ஏற்பட்டிருந்தது.இத்தகைய நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில்
வந்திறங்கிய சூரியாவுக்கு வண்டி எங்கே கிடைக்கப் போகிறது.

     ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற சூரியா ஐந்து நிமிஷம் தயங்கி
நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தான்.புதுடில்லிப் பக்கம் நடையைக்
கட்டுவதா அல்லது முதலில் பழைய டில்லிக்குப் போவதா என்னும்
பிரச்னைதான் அவனை அத்தகைய சிந்தனைக்கு உள்ளாக்கியிருந்தது.
கடைசியில் பழைய டில்லிக்கே சீட்டு விழுந்தது.விடுவிடு என்று பழைய
டில்லியை நோக்கி நடந்தான்.

     பழைய டில்லியில் ‘சாந்தினி சவுக்’ என்னும் வீதிக்கு வந்ததும்
சூரியாவின் நடை மெதுவாயிற்று.அவனுடைய உள்ளமோ சில நூறு வருஷம்
பின்னால் சென்று அந்தப்