பக்கம் எண் :

வெள்ளி வீதியிலே535

பிரசித்தி பெற்ற ‘வெள்ளி வீதி’யில் அவ்வப்போது நடந்த சரித்திர
நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று.

     அந்தச் ‘சாந்தினி சவுக் ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகப் பணக்கார
வீதி என்று பெயர் பெற்றிருந்தது.தங்க நகைக் கடைகளும் நவரத்தின
ஆபரணக் கடைகளும் உலகமெங்குமிருந்து வந்த பலவித அபூர்வமான
பொருள்களின் கடைகளும் அவ்வீதியில் இருந்தன.மன்னாதி
மன்னர்களெல்லாம் அணிய விரும்பக்கூடிய பட்டுப் பட்டாடைகளும் ரத்தினக்
கம்பளங்களும் பல கடைகளில் விற்கப்பட்டன.அந்த வீதியில் வசித்தவர்கள்,
கடை வைத்திருந்தவர்கள் அனைவரும் செல்வத்திற் சிறந்த சீமான்கள்.
இப்படியாகச் செல்வம் குவிந்திருந்த இடத்துக்கு ஆபத்துக்கள் வருவது
இயற்கையேயல்லவா?ஆபத்து ஒரு தடவை அல்ல, எத்தனையோ தடவைகள்
அந்த வெள்ளி வீதிக்கு வந்தது.

     ஐந்நூற்றைம்பது வருஷங்கள் முன்னால் மங்கோலியா தேசத்திலிருந்து
தைமூர் என்னும் அசுரன் ஒரு பெரிய ராட்சதப்படையுடனே வந்தான்.
அச்சமயம் டில்லியில் முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா அரசாண்டான்.
தைமூரும் முகம்மது துக்ளக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
இது காரணமாகத் தைமூர் கருணை காட்டினானா?இல்லை.முகம்மது
துக்ளக்கின் சைன்யத்தை டில்லிக் கோட்டை வாசலிலே தோற்கடித்து
நகருக்குள் புகுந்தான்.ஆயிரமாயிரம் பிரஜைகளைக் கொன்று குவித்தான்;
வெள்ளி வீதியின் செல்வத்தைக் கொள்ளையடித்தான்;இரத்தின
கம்பளங்களின் மீது இராஜ குமாரர்களும் இராஜகுமாரிகளும் நடமாடிய
இடமெல்லாம் இரத்த ஆறு ஓடும்படி செய்தான்.

     தைமூர் டில்லியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஹதாஹதம்
செய்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.அவன் போன பிறகு டில்லி நகரம்
ஒரு பயங்கர சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்தது போல் எழுந்தது.
கண்டது கனவல்லவென்றும் உண்மையான பயங்கரம் என்றும் உணர்ந்தது.
ஆயினும், அந்த அதிசயமான ஜீவசக்தியுள்ள நகரம் மறுபடியும்
அதிசீக்கிரத்தில்