பக்கம் எண் :

536அலை ஓசை

சீரும் செல்வமும் பெற்றுக் குபேர புரியாயிற்று இரத்த ஆறு ஓடிய ‘வெள்ளி
வீதி’யில் மறுபடியும் தங்க மொகராக்கள் குலுங்கும் சத்தமும் இராஜ
குமாரிகளின் பாதச் சிலம்பின் சத்தமும் கேட்கத் தொடங்கின.

     டில்லியின் சரித்திரத்தில் முந்நூற்று நாற்பது வருஷங்கள் சென்றன.
பாபர் முதல் அவுரங்கசீப் வரையில் மொகலாய சக்ரவர்த்திகள் வீற்றிருந்து
அரசு செலுத்திய இடத்தில் இப்போது முகம்மது ஷா என்பவன் அரசு
புரிந்தான்.அப்போது பாரஸீகத்திலிருந்து நாதிர்ஷா என்னும் கொடிய
அரக்கன் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்தான்.மறுபடியும்
‘சாந்தினி சவுக்’குக்கு ஆபத்து வந்தது.‘சாந்தினி சவுக்’குக்கு அருகில்
இருந்த மசூதியின் கோபுரத்தில், உட்கார்ந்து கொண்டு நாதிர்ஷா தன் மூர்க்கப்
படைகள் டில்லி வாசிகளைப் படுகொலை செய்யும் காட்சியைப் பார்த்துக்
களித்தான்.கொலைக்குப் பிறகு கொள்ளையும் அடித்தான்.மீண்டும் அந்த
வீதியில் இரத்த ஆறு ஓடியது;இரத்த ஏரி தேங்கி நின்றது.இந்த பயங்கர
சம்பவத்தின் ஞாபகார்த்தமாக அந்த வீதியின் ஒரு முனையிலுள்ள வாசலுக்குக்
‘கூனிதர்வாஜா’(இரத்த வாசல்) என்னும் பெயர் இன்று வரையில் வழங்கி
வருகிறது.

     நாதிர்ஷா வந்து போன இருபது வருஷத்துக்கெல்லாம் அவனுடைய
ஸ்தானத்துக்கு வந்திருந்த ஆமத்ஷா அப்தாலி என்பவன் டில்லிமீது படை
எடுத்து வந்தான்.நாதிர்ஷா பாக்கி வைத்து விட்டுப் போன செல்வத்தை
யெல்லாம் ஆமத்ஷா கொள்ளையடித்தான்;படுகொலையும் நடத்தினான்.
இந்தத் தடவையும் அந்த டில்லி நகரில் பெருங் கொடுமைக்கு உள்ளான
பகுதி ‘வெள்ளி வீதி’தான்.

     ஆமத்ஷாவுக்குப் பிறகு ஸிந்தியாக்களும், ஹோல்கார்களும்
ரோஹில்லர்களும் படையெடுத்து வந்து தங்கள் பங்குக்குக் கொள்ளையடிக்கும்
கைங்கரியத்தைச் செய்தனர்.

     கடைசி கடைசியாகப் பிரிட்டிஷாருடைய பெருங்கருணைக்கு டில்லி
மாநகரம் பாத்திரமாயிற்று.1857-ம் ஆண்டில் ‘சிப்பாய்க் கலகம்’என்று
அழைக்கப்பட்ட புரட்சி தோல்வி