பக்கம் எண் :

மரத்தடியில்539

ஜாக் கொடி இறங்கி இந்திய சுதந்திரக் கொடி பறக்கும் நாள் வருமா?அந்த
நாளைப் பார்க்கத் தனக்குக் கொடுத்து வைத்திருக்குமா...?

     இவ்விதம் சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது யாரோ தன்
இடது கையை இரும்புப் பிடியாகப் பிடித்ததை உணர்ந்து சூரியா திடுக்கிட்டுத்
திரும்பி பார்த்தான்.

                  
     8. மரத்தடியில்

     இரும்பையொத்த கையினால் தன் கையை அவ்விதம் பிடித்தவன்
ஆஜானு பாகுவான ஒரு போலீஸ்காரன் என்பதைக் கண்டான்.
ஒருகணநேரத்துக்குள் சூரியாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் பாய்ந்து
சென்றன.இத்தனை நாட்கள், இத்தனை தூரம் பிரயாணம்
செய்தபோதெல்லாம் பிடிபடாமல் வந்து கடைசியாக இந்த டில்லி நகரின்
முழுச் சோம்பேறிப் போலீஸ்காரனிடந்தானா சிக்கிக்கொள்ள வேண்டும்?
அதுவும் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் சில
பாக்கியிருக்கும் போது? இன்னும் இரண்டு நாள் அவகாசம் தனக்குக்
கிடைத்திருக்கக்கூடாதா?- இவ்விதம் ஏற்பட்ட மனக்கலக்கத்தைச் சூரியா
வெளியில் காட்டிக்கொள்ளாமல், “யார் நீ?எதற்காக என் கையைப்
பிடிக்கிறாய்?” என்று அதட்டலாகக் கேட்டான்.போலீஸ்காரன்,
“இன்ஸ்பெக்டர் சாகிப் உன்னைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்!”என்று
சொன்னதும் சூரியாவின் கலக்கம் அதிகமாயிற்று.“உன் இன்ஸ்பெக்டர்
சாகிப்பை எனக்குத் தெரியாது, அவரிடம் எனக்கு என்ன வேலை?நான் வர
முடியாது!”என்று சொன்னான்.

     அதற்கு அந்தப் போலீஸ்காரன், “இன்ஸ்பெக்டர் சாகிப்பை பார்த்தால்
இப்படிச் சொல்ல மாட்டாய்.சீக்கிரம் வா”என்று கூறினான்.

     இதை அவன் கூறிய குரல் சூரியாவின் மனதில் ஏதோ ஒரு
சந்தேகத்தை உண்டாக்கியது.குரலைக் காட்டிலும் அதிகமாக