பக்கம் எண் :

538அலை ஓசை

இரத்த ஆறு ஓடுமா?ஜெர்மானியரோ, ஜப்பானியரோ, ருஷியரோ, இங்கே
படையெடுத்து வருவார்களா?மறுபடியும் இந்த வெள்ளி வீதி ரணகளம்
ஆகுமா...?

     இப்படியெல்லாம் சூரியா சிந்தித்துக்கொண்டே நடந்தான்.மனம்
சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கண்கள் தங்கள் வேலையைச் செய்து
கொண்டிருந்தன.யாரையோ, எதையோ, அவனுடைய கண்கள் சுற்றிச் சுழன்று
தேடிக்கொண்டிருந்தன.ஆயினும் பலன் கிட்டவில்லையென்று அவனுடைய
முகத்தில் காணப்பட்ட ஏமாற்றமான தோற்றம் தெரிவித்தது.

     சூரியா வெள்ளி வீதியைக் கடந்து இன்னும் அப்பால் சென்று
கடைசியாக ஜு ம்மாமசூதியை அடைந்தான்.ஷாஜஹான் சக்கரவர்த்தி
கட்டியதும் இந்தியாவிலேயே பெரியதுமான அந்த கம்பீர மசூதியைக் கீழிருந்து
அண்ணாந்து பார்த்தான்.பிறகு அதன் படிகளில் ஏறினான்.முக்கால்வாசிப்
பார்த்தான்.பிறகு சற்றுத் தூரத்திலிருந்த கோட்டையைப் பார்த்தான்.
கோட்டைக்கும் மசூதிக்கும் நடுவிலிருந்த பகுதி ஒரு காலத்தில் ஜன
நெருக்கம் வாய்ந்த பகுதியாயிருந்ததென்றும், அங்கிருந்த ஆயிரக்கணக்கான
வீடுகளையும் மசூதிகளையும் பிரிட்டிஷ் துருப்புகள் பீரங்கிவைத்து இடித்து
நாசமாக்கித் திறந்த வெளியாகச் செய்துவிட்டார்கள் என்றும் நினைவு
கூர்ந்தான்.அவன் நின்று கொண்டிருந்த புகழ்பெற்றஜு ம்மா மசூதிகூட
பிரிட்டிஷ் துருப்புகளின் ஆதிக்கத்தில் கொஞ்சகாலம் இருந்தது.தைமூரும்
நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லத்தக்க பழைய
காலத்து ராட்சதர்கள்.ஆனால் படித்தவர்கள் என்றும் நாகரிகமடைந்தவர்கள்
என்றும் சொல்லிக் கொள்ளும் பிரிட்டிஷார் இந்த டில்லி மாநகரில் செய்த
அக்கிரமங்களைப்பற்றி என்னவென்று சொல்வது? அவற்றை எண்ணிப்
பார்த்தபோது சூரியாவின் இரத்தம் கொதித்தது.

     ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய அற்பமாற்சரியங்களை
ஒழித்துப் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு ஓட்டும் காலம் வருமா?பழைய
டில்லியிலும் புதுடில்லியிலும் யூனியன்