பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி101

வேண்டுமென்று திடீரென்று இப்போதுதான் நீங்கள் கண்டிக்கப் புறப்படுவது
என்னவோ போலிருக்கும். அது வேண்டாம்’ - என்றாள் மாதவி. அவளைப்
பரிமாறச் சொல்லியது, கைகழுவத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லியது
ஆகியவற்றைப் பற்றி நண்பன் கோபாலிடம் தான் கண்டிப்பதோ, விசாரித்துப்
பேசுவதோ மாதவியைப் பாதிக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.
கோபாலையும் நாளாக நாளாகத்தான் முத்துக்குமரனால் கணித்துப் புரிந்து
கொள்ள முடிந்தது. வந்த முதல் தினத்தன்று சந்தித்த கோபாலிடம் எவ்வளவு
பெருந்தன்மை இருந்ததாக அவனுக்குத் தோன்றியதோ அந்தப் பெருந்தன்மை
அவ்வளவும் தவறான கணிப்பு என்று இப்போது தோன்றியது. வெளியில்
பெருந்தன்மை உடையவனைப் போல தோன்றினானே ஒழியக் கோபாலனிடம்
உள்ளூற வஞ்சகமும், சிறுமையும், தற்பெருமையுமே நிரம்பியிருப்பதையே
கண்டான் முத்துக்குமரன். சென்னையைப் போன்ற பெரிய நகரங்களில்
மனிதர்களின் பெருந்தன்மையைப் பற்றிச் சராசரி வெளியூர்க்காரனுக்கு
ஏற்படுகிற ஆரம்பகால அநுமானம் நாட்பட நாட்படப் பொய்யாகி விடுகிறது
என்பதை முத்துக்குமரன் இப்போது புரிந்துகொண்டிருந்தான். பெருந்தன்மையும்,
கருணையும், அன்புமே முதலில் தெரிந்து அவற்றின் காரணங்கள் பின்னால்
போகப் போகத் தெரியும்போது முதலில் ஏற்பட்ட அநுமானமும், கணிப்பும்
தவறோ என்று தயங்க வேண்டியிருக்கிறது. கோபாலைப் பொறுத்த அளவில்
இப்போது அதே தயக்கம்தான் முடிவாக முத்துக்குமரனுக்கு ஏற்பட்டிருந்தது.

     சமூகத்தில் நாகரீகமடைந்த வீதிகள் எல்லாம் அழகாகவும்
அலங்காரமாகவும் பட்டினத்தில் தோன்றினாலும் - அந்த வீதிகளில் -
வீடுகளில் ஆற்றல் நிறைந்த சந்தர்ப்பவாதிகளும், கொடியவர்களும், ஆதரவற்ற

     ச - 7