பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி149

     ‘‘மானமில்லாட்டி எதை வேணாக் கேட்டுக்கலாம், உறைக்கவே
உறைக்காது.’’

     ‘‘உங்ககிட்டப் பழகிப் பழகித்தான் எவ்வளவோ மாறிக்கிட்டிருக்கேன்.
நீங்களே இப்படிப் பழி சொன்னா எப்படி?’’

     ‘‘தொலையட்டும்! இப்பக் கேக்கறதுக்குப் பதில் சொல்லு. அந்த
‘அயோக்கியன்’ எதுக்காகக் கூப்பிட்டான் உன்னை?’’

     ‘‘ஒண்ணுமில்லை, அப்துல்லாவை விருந்துக்கு அழைச்சிட்டு வர்றதுக்குப்
போகணுமாம்...’’

     ‘‘யாரு?’’

     ‘‘வேற யாரு? நான் தான்,’’

     ‘‘நீ எதுக்குப் போகணும்? அவன் போகட்டுமே? அவனுக்கும் போக
முடியாட்டி செகரெட்டரி எவனாவது போய்க் கூட்டிக்கிட்டு வரட்டுமே?’’

     ‘‘எங்கிட்டக் கூப்பிட்டுச் சொல்றாரு...நான் எப்படி மாட்டேங்கறது?’’

     ‘‘முடியுமா? அதான் நேத்திலிருந்தே சொல்லிக்கிட்டிருக்கேனே ‘அச்சமே
கீழ்களது ஆசாரம்னு’.’’

     ‘‘........’’

     ‘‘கலையினோட எல்லாப் பிரிவிலேயும் இன்னிக்கு வியாபாரம்
கலந்துரிச்சி. இனிமே இதைத் திருத்தவே முடியாது. விற்கக் கூடாததை எல்லாம்
விற்றுச் சாப்பிடத் துணியும் பஞ்சப்பட்ட குடும்பம் போல இழக்கக்கூடாததை
எல்லாம் இழந்து கலைஞர்கள் கூன் விழுந்த முதுகுகளுடன் பணத்தைத் தேடி
இன்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். கர்வப்பட வேண்டிய அளவு
மனோதிடத்தைத் தன்னிடம் மீதம் வைத்துக்கொள்ளாத கலைஞர்களையே

     ச - 10