தாள் அவள். மாலை ஐந்து மணிவரை தன்னுடைய கவலையையும் மனத்தின் பரபரப்பையும் கட்டுப்படுத்த முயன்று அவள் தோற்றாள். மாலை ஐந்தரைமணிக்கு முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு - அவள் புறப்பட்டுவிட்டாள். கோபாலிடம் கார் அனுப்பச் சொல்லிக் கேட்க அவளுக்கு விருப்பமில்லை. டாக்ஸியிலேயே போய்க் கொள்ளலாமென்று தீர்மானித்திருந்தாள் மாதவி. டாக்ஸி ஸ்டாண்டில் அவள் போன சமயத்தில டாக்ஸி ஒன்றும் இல்லை. சோதனை போல் டாக்ஸி கிடைப்பதற்கு நேரமாயிற்று. அந்த வெறுப்பில் முத்துக்குமரன் ஒருவன் மட்டுமின்றி உலகமே தன்னிடம் முறைத்துக் கொண்டிருப்பதைப்போல் உணர்ந்தாள் அவள். எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் தன் ஒருத்தி மேல் மட்டும் கோபமும் குரோதமும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. வீட்டிலிருந்து ‘அஜந்தா ஹோட்டல்’ வரை நடந்து வருவதற்குள்ளேயே தெருவில் வருகிறவர்களும் போகிறவர்களும் முறைத்து முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து கூசியவள், டாக்ஸி கிடைக்காமல் தெருவில் நிற்க நேர்ந்த போது இன்னும் அதிகமாகக் கூசினாள். உயரமும் வாளிப்புமாக - நாலு பேர் பார்வையைக் கவருகிற விதத்தில் இருப்பவர்கள் தெருவில் நடந்தாலே உற்று உற்றுப்பார்க்கிற உலகம் அழகு, கவர்ச்சி ஆகியவை தவிர நட்சத்திரக் களையும் உள்ள ஒருத்தி தெருவில் வந்துவிட்டால் சும்மா விடுமா? பார்க்கும் ஒவ்வொரு ஜோடிக் கண்களும் அவளைக் கூச வைத்தன? தலைகுனியச் செய்தன. அரைமணி நேரத்துக்குப் பிறகு ஒரு டாக்ஸி கிடைத்தது. நல்ல வேளையாக ‘போக் ரோடு’ திரும்பும் போதே எதிரே காரில் கோபால் எங்கோ வெளியே போவதை டாக்ஸியிலிருந்து அவள் பார்த்துவிட்டாள். அவள்தான் |