பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி173

     ‘‘நல்லா யோசனை பண்ணினீங்கன்னா உங்களுக்கே தெரியும்! ஒரு
மனுஷன் காரைக் கொண்டாந்து பக்கத்திலே நிறுத்திக்கிட்டு, ‘புறப்படு
போகலாம்’னு தார்க்குச்சி போடறப்ப எப்பிடி மாட்டேங்கறது?’’

     ‘‘அடிமைப்பட்டுப் போயிட்டா அப்பிடிச் சொல்ல முடியாது தான்...’’

     ‘‘யாரும் யாருக்கும் அடிமைப்பட்டுப் போயிடலை! அதுக்காகச் சாதாரண
முகதாட்சண்யத்தைக்கூட விட்டிட முடியாது.’’

     - கூறிக்கொண்டே அவள் எழுந்து நின்றாள். வாசற் பக்கம் போய்
கைதட்டி நாயர்ப் பையனைக் கூப்பிட்டாள். அவன் வந்தான்.

     ‘‘இதெல்லாம் இங்கேருந்து எடுத்துக்கிட்டுப் போ. வேணாம்’’ என்று
முத்துக்குமரனைக் கேட்காமலே பாட்டிலையும் கிளாஸ்களையும் ‘எடுத்துக்
கொண்டு போகும்படி பையனுக்குக் கட்டளையிட்டாள் அவள். அவளுடைய
கட்டளையை அவன் மறுக்கவில்லை.

     அவன் ஒருவேளை அந்த பாட்டில்களையும் கிளாஸ்களையும் எடுத்துக்
கொண்டு போகக் கூடாதென்று தடுப்பானோ என்ற தயக்கத்தில் பையன் ஓரிரு
விநாடிகள் பின்வாங்கினான். எடுத்துக் கொண்டு போ’ என்ற உத்தரவு
முத்துக்குமரன் வாய்மொழியாக வந்தாலொழிய பையன் அவற்றை எடுத்துக்
கொண்டு போகமாட்டான் போலத் தோன்றியது. முத்துக்குமரனும் வாய் திறந்து
அப்படிச் சொல்லவில்லை. மௌனம் எல்லாத் தரப்பிலும் நீடிக்கவே பையனும்
தயங்கி நின்றான்.

     ஐந்து நிமிஷத்துப்பின், ‘எடுத்துக் கொண்டு போய்த் தொலையேன், ஏன்
நிக்கிறே’ என்ற பாவனையில் கை