பக்கம் எண் :

182சமுதாய வீதி

அவன் தொடங்கி அரை குறையாக நிறுத்தியிருந்த வாக்கியத்தை அவள்
முடித்தாள்.

     சிரித்துக்கொண்டே சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு அவளோடு
புறப்படத் தயாரானான் அவன்.

     புறப்பட்டுப் படியிறங்குகிறபோதுதான். ‘‘எங்கே போகணும்கிறே இப்ப?-
’என்று போக வேண்டிய இடத்தைப் பற்றிக் கேட்டான் அவன்.

     ‘‘பேசாமே எங்கூட வந்தீங்கன்னாத் தானே தெரியுது’’ என்று
உரிமையோடு அவனை வற்புறுத்தினாள் அவள்.

     -கடை வாசலில் போய் இறங்கிய பின்புதான் அவள் தன்னைப்
புடைவைக் கடைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள் என்பது
அவனுக்குப் புரிந்தது. அவன் அவளைக் கேலி செய்யத் தொடங்கினான்.

     ‘‘ஓகோ! இப்பவே வற்புறுத்திப் புடைவைக் கடைக்கு இழுத்துக்கிட்டு வர்ர
அளவுக்குப் போயாச்சா? உருப்பட்டாப்லதான் போ - ’’ அவன் இவ்வாறு
கூறியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

     ‘‘நீங்கள் பார்த்து எது எது பிடிக்கிறது என்று சொல்கிறீர்களோ, அதை
மறு பேச்சுப் பேசாமல் எடுத்துக் கொள்ளப் போகிறேன்.’’

     ‘‘புடைவைகளைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் நான் இல்லையே;
கட்டிக்கொள்ளப் போகிறவர்கள் அல்லவா பிடித்தமானதைக் தேர்ந்தெடுக்க
வேண்டும்!’’

     ‘‘உங்களுக்கு எது பிடிக்குமோ அதுதான் எனக்கும் பிடித்ததாயிருக்கும்.’’

     கடைக்காரர்கள் அவர்கள் இருவரையும் அபூர்வமாக வரவேற்றனர்.

     ‘‘கோபால் சார் ஃபோன் பண்ணிச் சொன்னாரும்மா.