பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி195

     ‘‘எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேல்னு இருக்கு. இந்த ஊர் ரொம்ப
நல்லா இல்லே?’’

     ‘‘ஊர் மட்டுமென்ன? நீ கூடத்தான் இன்னிக்கு ரொம்ப ரொம்ப நல்லா
இருக்கே. உன்னைப் பார்க்கிறப்ப ஒரு வனதேவதை மாதிரியிருக்கு.’’

     ‘‘ஏது ரொம்பப் புகழறீங்களே?’‘

     ‘‘ஏதாவது கிடைக்காதான்னுதான்...’’

     அவளுடைய வலது கை ஸீட் பின்புறமாகப் பின்னால் மாலைபோல்
வளைந்து அவனுடைய வலது தோள் பட்டையைத் தடவிக் கொடுத்தது.

     ‘‘ரொம்ப சுகமாயிருக்கு.’’

     ‘‘இது ஏரோப்ளேனாக்கும்! உங்க அவுட்ஹவுஸ் இல்லே! இஷ்டம்
போலல்லாம் இருக்கிறதுக்கு - ’’

     ‘‘நீ பேசறதைப் பார்த்தா அவுட்ஹவுசுக்கு நீ வந்தப்ப எல்லாம் நான்
ஏதோ என் இஷ்டம்போல நடந்துகிட்டதாவில்லே ஆகுது.’’

     ‘‘தப்பு! தப்பு! எனக்கும் இஷ்டம்தான் ராஜா’’ - என்று அவன் காதருகே
முணுமுணுத்தாள் மாதவி. முத்துக்குமரன் அவளை வேறொரு கேள்வி
கேட்டான்:

     ‘‘கப்பல்லே புறப்பட்டவங்கள்ளாம் இன்னிக்குப் பினாங்கிலே
கரையிறங்கியிருக்கணுமில்லே?’’

     ‘‘இல்லே! நாளைக் காலையிலேதான் வந்து சேருவாங்க.
அவங்களுக்கெல்லாம் நாளைக்கு முழு ரெஸ்ட். நம்ம மூணு பேருக்கும்
நாளைக்கு ப்ரோக்ராம் ‘ஸைட்ஸீயீங்.’ நாளன்னிக்கித்தான் முதல் நாடகம்.’’

     ‘‘எங்கெங்கே எல்லாம் நாடகம் ஏற்பாடாகியிருக்கு?’’

     ‘‘முதல் நாலு நாள் பினாங்கிலே நாடகம். அடுத்த ரெண்டு நாள்
ஈப்போவில் நாடகம். அதற்கடுத்த ஒரு