பக்கம் எண் :

220சமுதாய வீதி

கூறினான். மூக்கைப் பிடித்துக்கொண்டு ‘பிசுபிசு’ என்று பால் தன்மையுள்ளதாய்
இருந்த ஒரு டொரியான் சுளையை மாதவியும் உள்ளே தள்ளி வைத்தாள்.
பலாச்சுளையைவிட வெண்மையாகவும், கடினமாகவும் இருந்த டொரியான் சுளை
மிகமிக இனிப்பாக இருந்தது. அத்தனை இனிப்பும் சுவையுமுள்ள அந்தப்
பழத்திற்கு ஏன் அவ்வளவு கடுமையான துர்நாற்றத்தையும் கடவுள் படைத்தார்
என்பதுதான் விந்தையாக இருந்தது. மலைரோடு வழியே பினாங்குத் தீவின்
எல்லாப் பக்கங்களையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்து விட்டார்கள் அவர்கள்.
கோபால் சுற்றிப் பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய தனி அந்தஸ்தையும்,
குழுவின் தலைமை நடிகன் என்ற கௌரவத்தையும் காண்பிக்க
விரும்பியவனைப் போல விலகியே இருந்தான். யாரிடமும் அதிகம்
ஒட்டவில்லை. அவன் மட்டும் ஏறி வருவதற்கென்று அப்துல்லா ஒரு ‘காடிலாக்’
ஸ்பெஷல் கஷ்டம் காரை ஏற்பாடு செய்து அனுப்பியிருந்தார். எல்லா
இடங்களுக்கும் அந்தக் கார்தான் முதலில் சென்றது; மற்ற வாகனங்கள்
அதையே பின் பற்றின.

                                17

     மறுநாள் மாலை அவர்கள் குழுவின் முதல் நாடகம் நடைபெறவேண்டிய
தினமாகையினால் காலையில் அவர்கள் எங்குமே வெளியே செல்லவில்லை.
பகலில் மேடை ஏற்பாடுகள், ஸீன்ஸ் - ஆகியவற்றைச் சரி பார்ப்பதற்காக
கோபாலும் வேறு சிலரும் நாடகம் நடைபெற இருந்த இடத்தைப் போய்ப்
பார்த்துவிட்டு வந்தார்கள். அன்று பகலுணவு ஸென்யீ என்ற அப்துல்லாவின்
நண்பரான சீனாக்காரர் வீட்டில் நடந்தது. ‘காண்ட்ராக்ட்காரர்’ அப்துல்லா
ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு அடை