பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி219

விட்டால் புகைப்படம் வீடு தேடிக்கொண்டு வரும் - என்று பாம்புக்
கோவிலுக்கு வரும் ஒவ்வொரு புதிய மனிதனையும் எதிர்கொண்டு உற்சாகமாகக்
கூறினார்கள் அந்தச் சீனப் புகைப்படக்காரர்கள்.

     கோபால் அந்தக் கோவிலுக்குள்ளேயே வரமாட்டேனென்று பிடிவாதமாக
வாசலில் நின்று கொண்டான். மாதவிக்குக்கூட உள்ளூறப் பயந்தான், ஆனால்
முத்துக்குமரன் தைரியமாக உள்ளே நுழைந்தபோது அவளால் பின்
தொடராமல் இருக்க முடியவில்லை.

     ‘‘நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிலேயே விஷப் பாம்புகளைவிடக்
கொடுமையானவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கே நாம்
பயப்படுவதில்லை. வீணாக இந்த வாயில்லாப் பிராணிகளுக்குப்
பயப்படுவானேன்?’’ என்று அவள் காதருகே முத்துக்குமரன் கூறினான்.

     ‘‘ஏதோ பழக்கத்தின் காரணமாக இந்தக் கோவிலுக்குத் தொடர்ந்து
பாம்புகள் வந்து கொண்டிருக்க வேண்டும். அவைகளைத் துன்புறுத்தினால்
ஒழிய அவை யாரையும் கடிப்பதில்லை’’ என்று குழுவினருக்கு வழிகாட்ட
வந்திருந்த அப்துல்லாவின் ஆள் ஒருவன் விளக்கம் கூறினான். பாம்புக்
கோவிலிலிருந்து பினாங்கு நகர வீதிக்குள் இருந்த புத்தர் கோவில் ஒன்றிற்கு
அவர்கள் சென்றார்கள். படுத்த கோலத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை
ஒன்று அந்த ஆலயத்தில் இருந்தது. மலைக்குப் போகிற வழியில் புராதனமான
இந்துக் கோயில் ஒன்றையும் அவர்கள் பார்த்தார்கள். மலைமேல் ஒரிடத்தில்
கார்களை நிறுத்தி டொரியான், ரம்புத்தான் பழங்களை வாங்கிக் கொடுத்தான்
வழிகாட்ட வந்தவன். டொரியான் பழத்தின் நாற்றத்தை நுகர்ந்ததும், குமட்டிக்
கொண்டு வந்தது மாதவிக்கு. முத்துக்குமரனோ அந்தப் பழத்தின் ஒரு
சுளையைச் சாப்பிட்டு விட்டுத் தேனாக இனிப்பதாகக்