| ‘‘........’’ அவள் அவனருகே வந்து அவனுக்கு மட்டுமே கேட்கிற மெல்லிய குரலில், கெஞ்சுவது போல் வேண்டினாள்: ‘‘இந்தாங்க! வீணா மனசைக் கெடுத்துக்காதீங்க. நான் இனி ஒருக்காலும் உங்களுக்குத் துரோகம் பண்ணமாட்டேன். இப்ப இந்த இடத்துலே நான் அநாதை, நீங்களும் இல்லேன்னா எனக்கு யாருமே துணையில்லே.’’ ‘‘சக்தியில்லாதவனிடத்தில் அடைக்கலமாவதில் என்ன பயன்?’’ ‘‘உங்களுக்குச் சக்தியில்லேன்னா இந்த உலகத்திலேயே அது இல்லே, வீணா அடிக்கடி என்னைச் சோதிக்காதீங்க... ‘‘ஏன் மூணு நாளா எங்கூடப் பேசலே?’’ ‘‘நீங்க ஏன் பேசலே?’’ ‘‘நான் கோபக்காரன், ஆண் பிள்ளை..’’ ‘‘அது தெரிஞ்சுதான் நானே முந்திக்கொண்டு வந்து இப்பக் கெஞ்சறேன்...’’ ‘‘நீ ரொம்பக் கெட்டிக்காரி...’’ ‘‘அதுவும் உங்களாலேதான்...’’ - கடுமை மறைந்து அவன் முகத்தில் புன்முறுவல் மலர்ந்துவிட்டது. அதற்குமேல் அவளிடம் அவனால் கடுமையைக் காட்ட முடியவில்லை. அருகே இழுத்து அவளை நெஞ்சாரத் தழுவினான் அவன். அவள் குரல் அவன் காதருகே கிளுகிளுத்தது. ‘‘வாசற் கதவு திறந்திருக்கிறது.’’ ‘‘ஆமாம்! போய் அடைத்து விட்டுவா! அப்துல்லா பார்த்துத் தொலைக்கப் போகிறான், ‘பணத்தின் ராஜா |