| 	      ‘‘பணம் கொடுத்திருக்காரு... ‘ஷாப்பிங் போகணும்னா வச்சுக்கணுமாம்...’’                   ‘‘யாருக்குப் பணம்?’’                ‘‘உங்களுக்கும் எனக்கும்...’’                ‘‘உனக்காக நீ வாங்கிட்டது சரி! எனக்குன்னு நீ எப்படி வாங்கலாம்?’’                   ‘‘நான் வாங்கலே! அவராக் கொடுத்திட்டுப் போறாரு.’’                   ‘‘கொடுத்திட்டுப் போனா வச்சுக்க. எனக்கு எந்தக் கடைக்கும்     போகவேண்டாம். எதுவும் வாங்க வேண்டாம்...’’                ‘‘அப்பிடியானா எனக்கும் போக வேண்டியதில்லை...’’                   ‘‘சே! சே! சும்மா நீயும் அப்பிடிச் சொல்லிக்காதே போய் வேண்டியவை     வாங்கிக்க - ‘உதயரேகா’ வைப்பாரு, ரெண்டு நாளாப் புதுப் புது நைலான்.     நைலக்ஸ்லாம் கட்டிக்கிறா...அவளுக்குக் குறைவான துணியை நீ கட்டலாமா...?     ஹீரோயினாச்சே நீ?’’                ‘‘இந்தாங்க! நீங்க இப்பிடிப் பேசறது உங்களுக்கே நல்லா     இருக்கா?...உதயரேகாவையும் என்னையும் ஒண்ணாப் பேசற அளவு உங்க மனசு     என் விஷயத்திலே கெட்டுப் போயிருக்கு...’’                ‘யார் மனசும் கெட்டுப் போகலே! அவங்க அவங்க மனசைத் தொட்டுப்     பார்த்தாத் தெரியும்.’’                ‘‘என்ன தெரியும்?’’-                ‘‘ரெண்டு மூணு நாளா எப்பிடி நடந்துகிட்டோம்னு தெரியும்.’’                   ‘‘இதே கேள்வியை நானும் உங்ககிட்டத் திருப்பிக் கேட்க முடியும்.’’     	 |