களையும்-அவற்றை வெல்ல முடியாவிடினும் அடக்கிக்கொள்ளப் பழகியிருக்கிறான். இந்நாவலின் கதை முழுவதும் சென்னை நகரிலும், சென்னையைவிட ‘நாகரிக’த்தில் அதிக முன்னேற்றமடைந்துள்ள மலேசியா நாட்டிலும் நடக்கிறது. இந்த ‘நாகரிக’ வாழ்வின் போலித்தனத்தையும் அவசர யுகத்தையும் கடுமையாகத் தாக்குகிற ஆசிரியர், இந்த ‘வெளிச்சம்போடும்’ வாழ்வுக்கிடையில் உண்மையான வாழ்க்கை வாழ வேண்டுமெனத் துடிக்கும் நெஞ்சங்களின் உணர்ச்சிகளையும் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இன்றைய சமூகத்தின் போலித்தனத்தையும் நகர வாழ்வின் குற்றங் குறைகளையும் எடுத்துக்காட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பினும் எவ்வித விரசமுமின்றிப் படிப்பதற்குச் சுவையாக வளர்ந்து செல்கிறது இந்நாவல். இந்த நல்ல நாவலை வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்களித்த ஆசிரியருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி. சென்னை கண. முத்தையா 22-9-68 தமிழ்ப் புத்தகாலயம் |