| பாங்க...அதை விட்டுட்டு ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனிட்டப் போயித் தலையைக் கொடுக்கிறாரு. அவன் சரியான இழுபறிப் பேர்வழி. ‘ஸீன்ஸ்’ எழுதி வாங்கறத்துக்குள்ளே திண்டாடப் போறாரு...’’ ‘‘அது சரி! அங்கப்பன் வீட்டுக்கு அவன் போறது சரிதான். நாமும் போகணுமா என்ன?’’ ‘‘கோபால் சார் விடமாட்டாரு, வற்புறுத்திக் கூப்பிடுவாரு...’’ ‘‘நீ என்ன நினைக்கிறே? எனக்கு நாம ரெண்டு பேருமே போக வேண்டாம்னு தோணுது.’’ ‘‘அது நல்லாருக்காது. ஏற்கெனவே நேத்து விஷயத்திலே அவர் மனசுக்கு எரிச்சலாகி இருக்கு. இன்னிக்கு வேற ரெண்டு பேருமாச் சேர்ந்து வரமாட்டோம்னா ஒரு மாதிரி விட்டுத் தெரியும். நீங்களும் வரத்தான் வேணும். ஒரு வேளை நீங்க வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாலும் நான் அவசியம் போகத்தான் போவேன். இல்லாட்டி வீண் மனஸ்தாபம் வரும்...’’ ‘‘நீ போகக்கூடாதுன்னு நான் தடுத்தால், அப்ப என்ன செய்வே?... ‘‘இங்கிதம் தெரிஞ்சவராயிருந்தா நீங்களே என்னை அப்படித் தடுக்க மாட்டீங்க.’’ ‘‘நான் இங்கிதம் தெரியாத ஆளுன்னு சொல்லவர்றியா நீ?’’ ‘‘அப்பிடி நான் சொல்லமாட்டேன். நீங்க சொல்றதை எல்லாம் நான் செய்யக் காத்திருக்கேன். நான் செய்ய முடியாததை நீங்க சொல்லி அன்பை உறைச்சுப் பார்க்க மாட்டீங்கன்னு நான் நம்பலாமில்லையா?’’ ‘‘சரி! நானும் வந்து தொலைக்கிறேன். ‘ஜில் ஜில்’லையும் அங்கப்பனையும் நானும்தான் பார்க்க வேண் |