பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி89

இன்னிக்கு காலையிலே எழுந்திரிச்சதுமே அவன் எங்கிட்ட வந்து ‘என்ன
வாத்தியாரே? ‘பீச்’லே சுத்தினியாமே?ன்னு ஒரு தினுசாக் கேட்டான். அப்ப
நான் என்ன நெனைச்சு சந்தேகப்பட்டேன் தெரியுமா? நீதான் கோபாலுக்கு
ஃபோன் பண்ணியிருப்பியோன்னு நினைச்சேன். உண்மை என்னன்னா
அவனே டிரைவரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டிருக்கான்.’’

     ‘‘அது எப்படியாவது போகட்டும், இப்பக் காரியத்தைக் கவனியுங்க...’’

     ‘‘எப்படி அவ்வளவு சுலபமா விட்டுடமுடியும்? இத்தினி பேச்சும்
அதனாலே தான் வந்தது!’’

     ‘‘இருக்கட்டுமே; அப்புறம் தனியா நாம ரெண்டு பேரும் பேசிக்கலாம்.
இப்ப - ‘‘ஜில் ஜில்’’ ஆசிரியர் கனியழகனோட கோபால் இங்கே வருவாரு.
எல்லாருமா நாடக சீன்கள் பார்க்கறத்துக்காக ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனோட
எடத்துக்குப் போறோம்.’’

     ‘‘கோபால் உங்கிட்டச் சொல்லிட்டுப் போனானா!’’

     ‘‘ஆமாம். இப்பக் கொஞ்ச நேரத்திலே ஜில்ஜில்லோட வந்துடுவாரு...’’

     ‘‘அது யாரு ஜில்ஜில்? எதாவது ஐஸ்ஃபேக்டரி வச்சிருக்கானா என்ன?’’

     ‘‘இல்லே! ‘ஜில் ஜில்’ லுங்கறது அவரு நடத்துற சினிமாப் பத்திரிக்கை.
‘ஆர்ட்டிஸ்ட்’ அங்கப்பனுக்கு அவரு பெஸ்ட் ஃபிரெண்ட்.’’

     ‘‘ரெண்டு பேருக்கும் நம்ம கோபால் ஃபிரண்டாக்கும்.’’

     ‘‘ஆமாம்! இவரு ஒரு வார்த்தை நாக்கு அசைச்சார்னா எத்தனையோ
ஸ்டூடியோக்கராங்க பிரமாதமான ஸீன்ஸ் - ஸெட்டிங்ஸ் எல்லாம் தயார் பண்ணிக் கொடுப்