| மல் சலிப்படைந்தான் முத்துக்குமரன். ‘‘சண்டை போட்டுக்கற கிழட்டுப் புருசன் பெண்சாதி மாதிரி எவ்வளவு நேரம்தான் ரெண்டு பேரும் இப்படிப் பேசிக்கணும்னு நீ நினைக்கிறே?’’ - இந்த உதாரணத்தைக் கேட்டு மாதவி கோபம் கலைந்து கலீரென்று சிரித்துவிட்டாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் தோள்பட்டைகளில் கைகளை ஊன்றி அழுத்தினான் முத்துக்குமரன். ‘‘சும்மா விடுங்க...வேலை செய்யிறவங்களைத் தொந்தரவு படுத்தப்படாது...’’ ‘‘இதுவும் ஒரு வேலைதானே?’’ ‘‘ஆனால் கோபால் சார் இந்த வேலைக்காக நம்மை இங்கே உட்கார்த்தலியே...? விறுவிறுன்னு எழுதுங்க... நாடகம் முடியணும். அவரு அரங்கேற்றத்துக்கு தலைமை வகிக்க மினிஸ்டரிட்டே டேட் வாங்கியிருக்காரு...’’ ‘‘அதுக்காக நான் என்ன செய்ய முடியும்?’’ ‘‘வேகமா எழுதணும்...அப்புறம் அரங்கேற்றத்துக்குத் தலைமை வகிக்க மினிஸ்டர் கிடைக்கமாட்டாரு...’’ ‘‘அவ்வளவு அவசரம்னா மினிஸ்டரையே ஒரு நாடகம் எழுதச் சொல்லியிருக்கணும்...’’ ‘‘இல்லே இன்னிக்கிக் காலையிலே நான் வந்ததும் ‘சும்மா பீச், அங்கே, இங்கேன்னு சுத்தாதே...நாடகத்தைச் சீக்கிரமா முடிச்சு வாங்கு. மினிஸ்டர் ப்ரிஸைட் பண்ணத் தேதி முடிவு பண்ணியிருக்கேன்’னு சொன்னாரு.’’ ‘‘ஓகோ...அதனாலேதான் பீச்சுக்குப் போனது வந்தது எல்லாத்தையும் கோபால்கிட்டே நானே சொல்லியிருப்பேனின்னு உனக்கு என் மேலே கோபம் வந்ததா? |