| யும் பாராமல் இருந்தாள் அவள். அவளை அப்படி மௌனமாக ஆக்கியதை அவனாலும் தொடர்ந்து விரும்ப முடியவில்லை. ‘‘என்ன நடந்ததென்றுதான் சொல்லேன்?’’ - என்று மறுபடியும் கேள்வியில். கோபத்தைக் குறைத்துப் பேச்சைச் சுமுகமாகத் தொடர்ந்தான் முத்துக்குமரன். அவள் கேட்கத் தொடங்கினாள். ‘‘ஏதோ, சொன்னீர்களே; அதை மறுபடி சொல்லுங்களேன் பார்க்கலாம்!’’ ‘‘எதைச் சொல்கிறாய் மாதவி? நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லையே?’’ ‘‘ஏன் சொன்ன வார்த்தைகளை மறைக்கிறீர்கள்? ‘உன்னைப்போல் பயந்து சாகிறவள்’ - என்று சற்றுமுன் ஏதோ கூறினீர்களே?’’ ‘‘ஆமாம், நேற்றிரவு நான் உன் வீட்டிலிருந்து புறப்படும்போது நீ காரில் என்னருகே வந்துசொன்ன வார்த்தைகள் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.’’ ‘‘அப்படி நான் என்ன சொல்லி விட்டேன்?’’ ‘‘நாம் கடற்கரைக்குப் போனது வந்தது எல்லாம் ‘அங்கே ஒண்ணும் ரொம்ப சொல்ல வேண்டாம்’னு நடுங்கினியே; அதைத்தான் சொன்னேன்...’’ ‘‘நடுக்கம் வேறே, முன்னெச்சரிக்கை வேறே...’’ ‘‘ரெண்டுக்கும் வித்தியாசம் நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணும் போலேயிருக்கு...’’ ‘‘அவசரப் படறவங்களுக்கும், ஆத்திரப்படறவங்களுக்கும் எப்படிச் சொன்னாலும் எதுவும் புரியப் போறதில்லை...’’ - திடீரென்று இரண்டு பேருமே இந்த விதமாகக் கடுமையுடன் உரையாடலைத் தொடர்வதை விரும்பா |