அல்லது இன்றைக்கு மட்டும் மௌன விரதமா?’’ - என்று அவனே முதலில் பேச்சைத் தொடங்கினான். அவள் டைப் செய்வதை நிறுத்திவிட்டு அவன் பக்கமாகத் திரும்பினாள். அவள் குரல் சீறினாற் போல ஒலித்தது. ‘‘நான் அவ்வளவு தூரம் சொல்லியனுப்பியிருந்தும் கோபால் சாரிடம் போய் நீங்கள் இதையெல்லாம் சொல்லியிருப்பது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அவளுடைய சந்தேகத்துக்கும் கோபத்திற்கும் காரணம் இப்போது அவனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. அவள் தன்னைப்பற்றி அத்தனை அவசரமாக ஒரு முடிவுக்கு வந்து கோபித்துப் பேசியதைக் கண்டு அவனுள்ளும் ஆத்திரம் கிளர்ந்தது. அவனுடைய புருவங்களும் வளைந்து கண்கள் சினத்தால் சிவந்தன. 7 ‘‘பெண்புத்தி பின்புத்திதான்’’ - என்பதை அப்போது முத்துக்குமரன் நன்றாக உணர்ந்திருந்தான். தன்னைப்பற்றி ஏன் அவள் சந்தேகப்பட நேர்ந்திருக்கிறது என்ற காரணத்தை அப்போது அவனால் அநுமானிக்க முடிந்தது. காரமாகவும் சுருக்கென்று உடனே அவள் மனத்தில் தைப்பது போலவும் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. ‘‘உன்னைப்போல் பயந்து சாகிறவள் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம். நான் ஏன் அப்படிச் செய்கிறேன்?’’ அவள் பதில் சொல்லவில்லை. அவளுடைய கைவிரல்கள் டைப் செய்வதை நிறுத்தி விட்டன. மௌனமாகத் தலை குனிந்தபடி, நின்று கொண்டிருந்த அவனை |