| | வாரும்! வாரும்! இருமின் யாவரும். |
| நாரா, | | வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்த! காணா யஃதோ! அவர்விடுங் கண்ணீர். | | | (சேவகர் அழுதலை நோக்கி) |
| ஜீவ, | | வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது? |
| முதற்சேவ, | 75. | பருதி கண்டன்றோ பங்கயம் அலரும்? அரச நீ துயருறி லழுங்கார் யாரே? |
| ஜீவ, | | பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்! இழந்தன முற்று மென்றோ வெண்ணினீர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை? |
| 80. | மும்மையி லிம்மியு முண்மையி லிழந்திலம். வெல்லுவ மினியும் : மீட்போம் நம்புகழ். அல்லையேற் காண்மின்! |
| | இறைவ! இப் போதுநீ இசைத்தவை சற்றுங் குறைவிலை. தகுதியே. கூறியபடியே |
| 85. | ஆவது காண்குவம். அழகா ரம்புயப் பூவின துயர்வு பொய்கையி னாழத் தளவா வதுபோல், உளமது கலங்கா ஊக்க மொருவன தாக்கத் தளவெனத் துணிவார்க் குறுதுயர் தொடுமுன் எவ்வும் |
| 90. | அணியார் பந்துறு மடிபோல், முயற்சியில் இயக்கி யின்பம் பயக்குமென் றிசைக்குஞ் சான்றோர் சொல்லுஞ் சான்றே யன்றோ? ஆதலி னிறைவநீ யோதிய படியே உள்ளத் தெழுச்சியு முவகையோ டுக்கமும் |
| 95. | தள்ளா முயற்சியுந் தக்கோர் சார்பும், | | | (குடிலனும் பலதேவனும் வர) | | | உண்டே லூழையும் வெல்லுவம், மண்டமர் அடுவதோ வரிது வடிவே லரசே! |
| குடில, (தனதுள்) | | இப்பரி சாயரசி ருப்பது வியப்பே! |
|
|
|