பக்கம் எண் :

மனோன்மணீயம்
117

தக்கோ ரென்றனன் சாற்றிய தென்னோ!

(அழுவதாகப் பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைத்து நிற்க.)

ஜீவ,

100.ஏனிது குடில! ஏன்பல தேவ!
ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ!

.குடில, 

அடியேன்,


ஜீவ, 

வருதி யிப்புறம்! வருதியென் னருகே!

குடில,(அழுது)

திருவடிச் சேவையில் -

ஜீவ,

செய்தவை யறிவோம்.


குடில, (ஏங்கி) 

ஜனித்தநாள் முதலா -

ஜீவ, 

உழைத்தனை! உண்மை!


குடில, 

105.உடல்பொரு ளாவி மூன்றையு மொருங்கே-

ஜீவ, 

விடுத்தனை உண்மை. விளம்பலென்?

குடில, 

உண்மையிற்

பிசகில னென்பது-

ஜீவ, 

நிசம்! நிசம்! அறிவோம்!


குடில,(விம்மி.) 

எல்லா மறியு மீசனே சான்றெனக்கு

அல்லா லில்லை -

ஜீவ, 

அனைவரு மறிவர்.


குடில,

110.அருமை மகனிவ னொருவன் -

ஜீவ, 

அறிகுவம்


குடில, 

பாராய் இறைவ-(பலதேவன் மார்பினைச் சுட்டிகாட்டி)

ஜீவ,.

(பலதேவனை நோக்கி.) வாராய்

குடில, 

இப்புண்

ஆறுமா றென்னை? தேறுமா றென்னை?
உன்னரு ளன்றிமற் றென்னுள தெமக்கே-

ஜீவ,

அம்பின் குறியன்று, யாதிது?

குடில, 

அடியேம்,


115.அன்பின் குறியிது!

ஜீவ,

ஆ! ஆ!