பக்கம் எண் :

மனோன்மணீயம்
118

குடில,

ஆயினும்

பொல்லாப் பகைவர்-பொய்யர்-அவர்பலர்.-
இல்லா தாக்குவ ரிறைவ! என் மெய்ம்மை- (அழ)


ஜீவ,வெல்வோம் நாளை! விடு விடு துயரம்,

குடில,(தனதுள்)அறிந்திலன் போலும் யாதும்! (சிறிதுளந் தெளிந்து)

ஜீவ,

அழுங்கலை.

120.

வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில்
வெற்றியுந் தோல்வியும் உற்றிட லியல்பே :
அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்!


குடில,(தனதுள்)சற்று மறிந்திலன்! என்னையென் சமுசயம்!

ஜீவ,முற்றிலும் வெல்லுதும் நாளை, அதற்கா
125.

ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர்
நணுகினும் நாளை -


குடில,

நாயேற் கதனில்

அணுவள வேனு மிலையிலை யயிர்ப்பு.
நெடுநா ளாகநின்பணி விடைக்கே
யுடலோ டாவியா னொப்பித் திருந்தும்,

130.

கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில்
விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க்
கொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால்
தடுமா றடைந்தென் தகைமையும் புகழுங்
கெடுமா றுகுத்த கெடுமதி யொன்றே

135.

கருத்திடை நினைதொறுங் கண்ணிடு மணல்போல்,
உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும்,
பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலங்
கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்!
அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன்! ஐயோ!

140.வடிவே லொன்றென் மார்பிடையிதுபோற்

(பலதேவனைக் காட்டி)

படுமா றில்லாப் பாவியே னெங்ஙனம்
நோக்குவன் நின்முகம்? காக்குதி! ஐயோ!
தாக்குறு பகைவர் தம்படை யென்னுயிர்