| | போக்கில. நீயே போக்குதி! காக்குதி! |
| 145. | இரக்கமுற் றுன்றிருக் காத்துறை வாளிவ் உரத்திடை யூன்றிடி லுய்குவன். அன்றேல்-(அழுது) |
| ஜீவ, | | உத்தம பத்தியி லுனைப்போல் யாரே! |
| நாரா,(தனதுள்) | | மெத்தவு நன்றிந் நாடகம். வியப்பே! மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்? |
| 150. | போரிடை யுளதன் றியார்செய் தனர்பின்? உணர்குவம். இப்பேச் சோய்விலாப் பழங்கதை. |
| குடில, | | சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில், இத்தனை கருணையு மெனக்கென அருளுதி. பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா |
| 155. | யாதுமொன் றெனக்கா விரந்திலன். உணர்வை. ஓதிய படியென் னுரங்கிழித் துய்ப்பையேற் போதுமிங் கெனக்கு. அப்போதலோ காண்குவர் மன்னுல குள்ளா ரென்னுள நிலைமை! உன்பெயர்க் குரிய வொவ்வோ ரெழுத்தும் |
| 160. | என்னுரத் தழியா எழுத்தினி லெழுதி யிருப்பது முண்மையோ இலையோ என்பது பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே. |
| ஜீவ, | | அழுவதென்? எழு ! எழு ! யா ரறியார்கள்! உன்னுளம் படும்பா டென்னுள மறியும். |
| 165. | என்னநு பவங்கேள் குடிலா! ஈதோ சற்றுமுன் யானே தற்கொலை புரியத் துணிந்துவா ளுருவினேன். துண்ணென நாரணன், அணைந்தில னாயினக் காலை - |
| ஜீவ, | | தடுத்தான் ; விடுத்தேன்! |
| குடில,(தனதுள்) | | கெடுத்தா னிங்கும்! |
| ஜீவ, | 170. | அரியே றன்ன அமைச்ச! பெரியோர் |
|
|
|