| | தரியார் ; சகியார் சிறிதொரு சழக்கும். ஆயினு மத்தனை நோவதற் கென்னே? வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக் கருதினோம்! உறுத! வெருவியோ மீண்டோம்? |
| குடில, | 175. | வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. மீண்டதிற் குறைவென்? ஆ! ஆ! யாரே வெருவினார்? சீ! சீ! வீணவ் வெண்ணம்! இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென் றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய் |
| | (நாராயணன் நின்றவிடம் நோக்கி) |
| 180. | சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி! அதுவலா லென்குறை மதிகுல மருந்தே! சென்றுநா மின்று திரும்பிய செயலே நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர். செவ்விதி லோடிநாய் கௌவிடும் : சிறந்த |
| 185. | மடங்கலோ வெதற்கும் மடங்கியே குதிக்கும். குதித்தலும் பகையினை வதைத்தலு மொருகணம். நாளை நீ பாராய்! நாந்தூ தனுப்பும் வேளையே யன்றி விரிதலை யனந்தை யூரா ரிவ்வயி னுற்றதொன் றறியாச் |
| 190. | சீராய் முடியுநஞ் சிங்கச் செருத்திறம்! மீண்டோ மென்றுஉனித் தூண்டிலின் மீனென ஈண்டவ னிருக்குக : இருக்குக. வைகறை வரும்வரை யிருக்கில் வந்தவிவ் வஞ்சியர், ஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி |
| 195. | தனக்கே தட்டிடில் தப்புவ னென்பதே யெனக்குள துயரம். அதற்கென் செய்வோம்? ஆதலி னிறைவ! அஞ்சினே மென்றொரு போதுமே நினையார் போர்முறை யறிந்தோர். |
| ஜீவ, | | எவ்வித மாயினு மாகுக, வைகறை, |
| 200. | இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் அதுவெலா மகலநின் றரும்போ ராற்றுதும். |
| குடில, | | வஞ்சியா னிரவே யஞ்சிமற் றெழிந்திடில் |
|
|
|