பக்கம் எண் :

மனோன்மணீயம்
121

அதுவுமாம் விதமெது?

(சேவகன் வர.)


சேவகன். 

உதியன் தூதுவன்.

உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே.

குடில, 205.

சரி! சமா தானஞ் சாற்றவே சார்ந்தான்.


ஜீவ, பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல்.

(வஞ்சித்தூதன் வர)


தூதன். தொழுதனன், தொழுதனன், வழுதி மன்னவா!

(வணங்கி)

அருளே யகமாத் தெருளே மதியா
அடலே யுடலாத் தொடைபுக ழேயா

210.

நின்றவென் னிறைவ னிகழ்த்திய மாற்றம்
ஒன்றுள துன்வயி னுரைக்க வென்றே
விடுத்தன னென்னை யடுத்ததூ துவனா.
இன்றுநீ ரிருவரு மெதிர்த்ததில் யாவர்
வென்றன ரென்பது விளங்கிடு முனக்கே.

215.

பொருதிட இனியுங் கருதிடில் வருவதும்
அறிகுவை! அதனா லறிகுறி யுட்கொண்
டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே
யுன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு
கும்பநீரு மோர் நிம்ப மாலையும்

220.

ஈந்தவ னாணையில் தாழ்ந்திடில் வாழ்வை!
மதிற்றிற மதித்திறு மாப்பையேல் நதியிடை
மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே.
ஆதலி னெங்கோ னோதிய மாற்றம்
யாதெனிற் கைதவா! வைகறை வருமுன்

225.

தாரு நீருநீ தருவையேற் போரை
நிறுத்துவன். அல்லையேல் நின்புரம் முடிய
ஒறுத்திட உழிஞையுஞ் சூடுவன். இரண்டில்,
எப்படி யுன்கருத் தப்படி யவற்கே.


ஜீவ, நன்று! நன்று! நீ நவின்றனை. சிறுவன்
230.

வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக்
கருதித் தன்னுளே வெருவியோ வுன்னை