பக்கம் எண் :

மனோன்மணீயம்
122

விடுத்தன னென்பதிங் கெடுத்துரை யாதே
யடுத்திவ ணுள்ளா ரறிகுவர். ஆயினும்,
மற்றவன் தந்தசொற் குற்றநம் விடை

235.

சாற்றுதுங் கேட்டி, தன்பொரு ளாயின்
ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம்.
அருந்திடச் சேர னவாவிய புனலும்
விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம்
வரும்பாரம் பரைக்கா மல்லா லெனக்கே

240.

யுளவல ; அதனா லொருவனீந் திடுதல்
களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய
வுழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில்
நொச்சியு முளதென நிச்சயங் கூறே.


தூது,ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன்
245.

மெய்யா மியல்பு. மிகுமுன் சேனையின்
தீரமுந் திறமும் உனதரும் வீரமுங்
கண்முற் படுமுன் கவர்ந்தேச ரற்கிம்
மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை?
என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்!


குடில, 250.

நில்லாய் தூதுவ! நின்தொழி லுன்னிறை
சொல்லிய வண்ணஞ் சொல்லி யாங்கள்
தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே யன்றி
விரவிய பழிப்புரை விளம்புத லன்றே.
அதனா லுன்னுயி ரவாவினை யாயின்

255.விரைவா யேகுதி விடுத்தவ னிடத்தே.

தூது, 

குடிலா! உன்மனப் படியே! வந்தனம்.
மருவிய போரினி வைகறை வரையிலை.
இரவினில் வாழுமின் இவ்வா னகத்தே. (தூதுவன் போக)


குடில,தூதிது சூதே, சொன்னேன் அன்றோ?

ஜீவ,260.

ஏதமில் மெய்ம்மையே யாயினு மென்னை?
நீருந் தாரும் யாரே யளிப்பர்?
எனவோ வவைதாம்? யாதே வரினும்