பக்கம் எண் :

மனோன்மணீயம்
128

குடில,சென்றது செல்லுக. ஜயிப்போம் நாளை,
 75.ஒன்றுநீ கேட்கி லுளறுவ னாயிரம்.
கெடுநா வுடையான். கேட்டினி யென்பயன்?
ஜீவ,விடுவே மல்லேம. வெளிப்படை. கேட்பதென்?
எழுமுன் னவன்கழு வேறிடல் காண்குதும்.
குடில,தொழுதன னிறைவ! பழமையன்! பாவம்!
80.சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை!
ஜீவ,எதுவெலாம் பொறுக்கினு மிதுயாம் பொறுக்கிலம்.
எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்!
குடில,சுத்தன்!
ஜீவ,

சுத்தனோ? துரோகி! துட்டன்!

(நாராயணன் உள்ளே வர)

இட்டநங் கட்டளை யென்னையின் றுனக்கே?

(முருகன் முதலியோர் வாயிலில் நிற்க)

நாராயணன்.85.எப்போ திறைவ!
ஜீவ,

இன்றுபோர்க் கேகுமுன்!

நாரா,அப்போ தாஞ்ஞையா யறைந்ததொன் றில்லை.
கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன்.
ஜீவ,குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்!
நாரா,குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன்.
ஜீவ, 90.கெடுவாய்! இனிமேல் விடுவாய் பகடி!
குடிலனென் னமைச்சன்.
நாரா,

நெடுநா ளறிவன்!

ஜீவ,நானே யவனிங் கவனே யானும்.
நாரா,ஆனால் நன்றே. அரசமைச் சென்றிலை
ஜீவ,கேட்டது கூறுதி.
நாரா,

கேட்டிலை போலும்!

ஜீவ,95.கடிபுரி கரத்தைகொல்?
நாரா,

காத்தேன் நன்றாய்.

ஜீவ,காத்தையே லகழ்க்கணந் தூர்த்ததென் பகைவர்?