பக்கம் எண் :

மனோன்மணீயம்
129

நாரா,  

தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம்.
பார்த்துமேற் பகருதி.

ஜீவ, 

பார்த்தனம் உன்னை

ஆர்த்தபோர்க் களத்திடை. அதுவோ காவல்?

நாரா,  

100.உன்னையுங் காத்திட வுற்றனன் களத்தில்,

ஜீவ, 

என்னையுன் கபட நாடகம்? இனிதே!

அவனுரம் நோக்குதி, அறிவைகொல்?

(பலதேவனைக் காட்டி)

நாரா, 

அறிவேன்.

ஜீவ, 

எவனது செய்தவன்?

நாரா, 

அவனே யறிகுவன்.

ஜீவ, 

ஒன்றும் நீ யுணர்கிலை?

நாரா, 

உணர்வேன். இவன்பால்

105.நின்றதோர் வீரன்:இப் பொற்றொடி யுடையான் :
“என்தங் கையினிழி விப்படி யெனக்கே”
என்றுதன் கைவே லிவனுரத் தெற்றிப்
பொன்றின னெனப்பலர் புகல்வது கேட்டேன்.

ஜீவ, 

நன்றுநன் றுன்கதை!

குடில, 

நன்றிது நன்றே!

(பொற்றொடி காட்டி)

110.பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி.
காணுதி முத்திரை! வாணியுஞ் சேர்ந்துளாள்.
இச்செயற் கிதுவே நிச்சயங் கூலி.
அடியேந் தமக்கினி விடையளி. அகலுதும்.
அஞ்சிலே முடலுயிர்க் கஞ்சுவம் மானம்.

115.வஞ்சகர் கெடுப்பர். வந்தனம்.

(தன்முத்திரைமோதிரங் கழற்றி நீட்ட)

ஜீவ, 

நில்! நில்!

(நாராயணனை நோக்கி)

இத்தனை சூதெலா மெங்குவைத் திருந்தாய்?
உத்தமன் போலமற் றெத்தனை நடித்துளாய்
சோரா! துட்டா! சுவாமித் துரோகி!