பக்கம் எண் :

மனோன்மணீயம்
130

வாரா யமைச்ச! வாரீர் படைகாள்!

(முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர)

120.

நாரா யணனிந் நன்றிகொல் பாதகன்,
இன்றியா மிவனுக் கிட்டகட் டளையும்
நன்றியு மறந்து நன்னகர் வாயிற்
காவல் கைவிடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும்,
மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும்,

125.

ஏவலர்க் கதனையீந் தேபல தேவன்
ஓவலி லுயிரினை யுண்டிடத் தூண்டியும்,
அநுமதி யின்றியின் றமர்க்களத் தெய்திக்
கனைகழற் படைபரி கரிரதங் கலைத்துச்
சுலபமா யிருந்தநம் வெற்றியுந் தொலைத்துப்

130.

பலவழி யிராஜத் துரோகமே பண்ணியும்
நின்றுளான். அதனால் நீதியா யவனை
யின்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்!
அறிமின் யாவரும்! அறிமின்! அறிமின்!
சிறிதன் றெமக்கிச் செயலால் துயரம்.

135.இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு.

நாரா,

வெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதி்க்கே!
அறியா யாயி னிதுகா றாயும்
வறிதே மொழிகுதல்! வாழ்க நின்குலம்!


ஜீவ,நட்பல : மக்களே யாயினென்? நடுநிலை
140.யற்பமு மகலோம். ஆதலி னிவனை

(படைத்தலைவரை நோக்கி)

நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்!


முருகன். 

அடியேம். நொடியினி லாற்றுது மாஞ்ஞை.
குடிலரே வாரும்!


ஜீவ,

மடைய னிவன்யார்?


முருகன்.

கூறிய பலவும், குடிலரோ டொவ்வும்.

145.

வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே?


குடில,கேட்டனை யிறைவ! கெடுபயல் கொடுமொழி.

(காதில்)மூட்டின னுட்பகை!