பக்கம் எண் :

மனோன்மணீயம்
131

நாரா,

முருகா ! சீ ! சீ !

(முருகனை அருகிழுத்து)

ஜீவ,மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில்

(சேவகனை நோக்கி)

முருக,ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும்.

(வாயிற் சேவகன் வர)

சேவ, 150.சுந்தர முனிவர் வந்தன ரவ்வறை.
சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம்.
ஜீவ,வந்ததெவ் வழியிவர்! வந்தனங் குடிலா!
நடத்துதி யதற்குள் விதிப்படி விரைவில்.
குடில,மடத்தனத் தாலிவர் கெடுத்தனைப் புகல்வர் ;
 155.விடுத்திட வருளாய்!
ஜீவ

 விடுகிலம்.

குடில,

ஆயின்,

அடுத்துநின் றிதுநீ நடத்தலே யழகாம்.
ஜீவ,(தன் சேவகனை நோக்கி)அடைத்திடு சிறையினில். அணைகுதும் நொடியில்
 

(ஜீவகன் போக)

குடில,சடையா! கொடுபோ யடையாய் சிறையில்.

(சடையன் அருகே செல்ல)

முருக,அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம்.

(சடையன் பின்னும்நெருங்க)

160.வேணுமோ கோணவாய் விக்கா!
சடையன்

கொக் கொக்!

(விக்கி)

முருக,கூவலை! விடியுமுன் கூவலை!
சடையன்.

கொக்கொக்.

சேவகா யாவரும்.சேவலோ! சேவலோ! சேவலோ! சேவலோ!
 

(கைதட்டிச் சிரித்து)

குடில,ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்!
வீதியிற் செல்லலை. வீணர்! அபாயம்!
165.ஒழிகுவ மிவ்வழி! வழியிது! வா! வா!

(குடிலனும் பலதேவனும் மறைய)