பக்கம் எண் :

மனோன்மணீயம்
132

சேவகரிற் சிலர். பிடிமின் சடையனை !
(சடையனும் குடிலன் சேவகரும் ஓடிட, சிலபடைஞர் துரத்திட,சிலரார்த்திட)
மற்றைய சேவகர்

பிடிமின்! பிடிமின்!

சேகரிற் சிலர் குடிலனெங் குற்றான்?
குடிலன்,

கொல்வரே! ஐயோ!

(நன்றாய் மூலையில் மறைய)

சேவ,ரிற் சிலர்.

விடுகிலங் கள்வரை!

மற்றைய சேவ, 

பிடிமின்! பிடிமின்!

(கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக)

நாரா,(ஒரு திண்

முருகா! நிகழ்பவை சரியல சிறிதும்.

வணயிலேறி நின்று)அருகு நில். சீ! சீ! அன்பரே அமைதி!

(குழப்பங் குறைந்து அமைதிசிறிது பிறக்க)

முருக,

அமைதி! கேண்மின்!

முதற்சேவகன்.

அமைதி! அமைதி!

நாரா,நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி
சொல்லிட வாசை! சொல்லவோ?

(குழப்பந் தீர)

சேவ,ரிற்சிலர். 

சொல்லுதி,

(சிறிது சிறிதாய்ப் படைஞர்நெருங்கிச் சூழ)

சேவகா யாவ, சொல்லாய்! சொல்லாய்! பல்லாயி ரந்தாம்!
நாரா, 175.நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம்
முன்பி னறியா வென்போ லிகள்மேல்
அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்!

(கைகூப்பி)

சேவகர்.

அறியா ருனையார்? அறிவார் யாரும்.

(முற்றிலும் அமைதி பிறக்க)

நாரா,

அறிவீ ராயினும் யானென் செய்துளேன்?

180.

என்செய வல்லவன்! என்கைம் மாறு!
பாத்திர மோநும் பாரிவிற் கித்தனை!

சேவகர்.

காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ!

நாரா, கெட்டார்க் குலகி னட்டா ரில்லை!
ஆயினும், வீரர்நீ ராதலின், நும்முடன்
185.

ஈண்டொரு வேண்டுகோ ளியம்பிட வாசை
அளிப்பிரோ வறியேன்? 

(படைஞர் நெருங்கிச் சூழ)