| குடில, (பல தேவன் காதில்) | | ஒளித்ததிங் குணர்வனோ? ஓ! பல தேவ! |
| நாரா, | | ஒருதின மேனும் பொருதுளே னும்முடன் கருதுமி னென்னவ மானமுஞ் சிறிதே. |
| சேவகர். | 190. | உரியதே யெமக்கது. பெரிதன் றுயிரும்! |
| | (யாவரும் கவனமாய்க் கேட்க) |
| குடில, (தனதுள்) | | எரியிடு வானோ இல்லிடை? ஐயோ! |
| நாரா, | | அத்தனை யன்புநீர் வைத்துளீ ராயின் என்மொழி தனக்குநீ ரிசைமின். எனக்காத் தீதே யாயினுஞ் செமித்தருள் புரிமின்! |
| சேவ, | 195. | யாதே யாயினுஞ் சொல்லுக! |
| | போர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை. ஊர்ப்புறத் தின்ன முறைந்தனர் பகைவர். நாற்புற நெருப்பு : நடுமயிர்த் தூக்கின் மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை. |
| 200. | இதனிலு மபாயமிங் கெய்துதற் கில்லை. நுந்தமிழ் மொழியு மந்தமில் புகழுஞ் சிந்திடும் : சிந்திடும் நுஞ்சுதந் தரமும். இத்தகை நிலைமையி லென்னைநுங் கடமை? மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே! |
| 205. | எண்ணுமின் சிறிதே! என்னைநந் நிலைமை! களிக்கவுந் கூவவுங் காலமிங் கிதுவோ? வெளிக்களத் துளபகை, வீண்கூக் குரலிதைக் கேட்டிடிற் சிறிதுங் கேலியென் றெண்ணார் ; கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர். |
| 210. | பெரிதுநம் மபாயம்! பேணி யதற்குநீர் உரியதோர் கௌரவ முடையராய் நடமின். விடுமின் வெகுளியும் வீண்விளை யாட்டும். படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல். அடலோ தடையதற்கு? ஆணையே யணையாம். |
| 215. | உடைபடி லுலகெலாங் கெடுமொரு கணத்தில். |
|
|
|