| | கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ? பின்பார் தடுப்பர். அதனா லன்பரே! ஆணைக் கடங்குமின், |
| நாரா, | | இதுபோ லில்லை யெனக்குப காரம்! |
| 220. | இரந்தேன். அடங்குமின்! இரங்குமி னெமக்கா! |
| 1-ம் சேவ, | | நாரா யணரே! நவின்றவை மெய்யே! ஆரே யாயினுஞ் சகிப்ப ரநீதி? |
| நாரா, | | ஏதுநீ ரநீதியென் றெண்ணினீர்? நண்பரே! ஓதிய வரச னாணையை மீறி |
| 225. | யெனதுளப் படிபோர்க் கேகிய வதற்கா மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த தண்டனை யோவநி யாயம்? அலதியான் உண்டசோற் றுரிமையு மொருங்கே மறந்துமற் றண்டிய வரச குலத்திற் கபாயம் |
| 230. | உற்றதோர் காலை யுட்பகை பெருக்கிக் குற்றமில் பாண்டிக் கற்றமில் கேடு பண்ணினே னென்னப் பலதலை முறையோர் எண்ணிடும் பெரும்பழிக் கென்பெய ரதனை யாளாக் கிடநீர் வாளா முயலலோ |
| 235. | யாதே யநீதி? ஓதுமின். அதனால் என்புகழ் விரும்புவி ராயின், நண்பரே! ஏகுமி னவரவ ரிடத்திற் கொருங்கே! |
| 1-ம் சேவ, | | எங்கினி யேகுவ மிங்குனை யிழந்தே? |
| 2-ம் சேவ, | | உன்கருத் திருப்பிற் குரியதோ விவ்விதி? |
| நாரா. | 240. | கருத்தெலாங் காண்போன் கடவுள். விரித்த கருமமே யுலகங் காணற் குரிய ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் னரசனை. செல்லுமின், நில்லீர்! செல்லிலென் றனக்கு |
|
|
|