பக்கம் எண் :

மனோன்மணீயம்
194

யோடுகின்ற வாய்க்கால் தண்ணீரில் ஓடச்செய்துவிட்டு சின்னஞ்சிறு பெண்களின் குறும்புகாட்டிச் சிரித்ததை நான் என்ன எண்ணிக்கொள்வேனோவென்று நீ யெய்திய கலக்கப்பாடு இன்னும் என்கண்முன் நின்கின்றது.

ஏ-வாணீ! பெண்கள் நாயகமே! நீ பயப்பட வேண்டாம். நிச்சயமாக அறிவேன். என்னுடைய உள்ளத்தோடு உன்னுள்ளம் ஒத்துநின்றபின் நம்மிருவருக்குள் ஆடிக்கொள்ளும் பேச்சும் செய்கையும் எதுவானாலென்ன?

49. அழுங்கலை - வருந்தாதே.

50-51. இவ்வடிகள் "கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்னபயனு மில" என்ற திருக்குறள் 110 அதி, 10-ம் செய்யுட் கருத்தமைந்தவை.

53. யார்கொல் - யாரோ (ஐயம்). சூழ்ச்சியென் - எதைக் குறித்துப் பேசுகிறார்கள்.

நற்றாய் - ஈன்றதாய் (சோரஸ்திரீயின் தாய்).

என்னுடைய மகள் உன்பொருட்டாக நாணத்தையும் விட்டு நலத்தையுங் கெடுத்து உன்னை நம்பி வீணில் சம்பவித்த இந்தக் கேடுகளெல்லாம் அவன் சாகும் வரைக்கும் உலகம் சொல்லிக்கொண்டே யிருக்கும். நாங்கள் பெரிய குடியிற் பிறந்தவர்களாதலினாலேயே வாணியினுடைய வம்புரை (கல்யாணப்பேச்சு) கேட்க நாங்க ளஞ்சுகிறோம். நீ வருவாயா, வரமாட்டாயா?

என்னுடைய மகள் உன்னுடன் சம்பந்தப்பட்டவளாதலினாலே நாணம் இழந்தவளாயினாள். அந்நாணமிழந்த என்மகள் நீ வந்து அவட்கு நல்காமையினாலே இதோ சாகப்போகின்றாள். அதற்கும் வெகு நாட்களில்லை. அவளைப் பார்ப்பதற்கு நீயும் விரும்பவுமில்லை. அவளுனக்கெழுதி யிருக்கின்ற இந்த ஓலையில் அவளது நிலைமையைக் கண்டு கொள்வாய்.

இவ்வோலையை வாணிக்குத் தெரியாமல் நீ வாசித்து அறிந்துகொள். அப்படி வாசித்தறிந்தபின்னும் நீ வருவாயோ வரமாட்டாயோ. தன்னுடைய நாயகி சாகக்கிடக்கின்றாள் என்று தெரிந்துங் காண விரும்பாத பாதகனோ இவன்! (சாகக் கிடக்கின்றாள் - பிரிவாற்றாமையின்கண் வந்தசாவு)

ஆசிரியத்துறை 1 - உகுத்து-சிந்தி. வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு.

ஆசிரியத்துறை 2. - நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவுசெய்கின்றிலேம். வௌவலம் - பற்றுகிலேம், காண - கண்டபின்.

ஆசிரியத்துறை 3.- விரும்பலை - விரும்பாதே. கொள்வை - கொள்வாய். காணிய - காண.

"செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" (திருக்குறள் 1160)

54. கேட்குதும் - கேட்போம்.

58. பழங்கதை - வாணியைப் பலதேவனுக்கு மணம்பேசி யிருப்பதாய்க் கேட்ட நற்றாயின் கூற்றுக்கு இவன் பொய்யெனக் காட்டும்பொருட்டுப் பழங்கதை யென்றான்.

61. கிழப்பிணம் - சகடன்.

64. பொற்றொடி - பொன்னாலாகிய வளை, (மைச்சினி - தன் சோரகாதலிக்குப் பலதேவன் வைத்த முறை.)

71. அலகை - பேய்.

72. (கணிசம் - கண்ணியம், வழக்கச்சொல். அது - விவாகம். இது - சோரநாயகி போகம்.)

78. கடு - விடம், நஞ்சு.

79. கைத்தது - கசந்தது.

100. உசிதன் - பாண்டியன்.

108. நிண்ணயம் - நிர்ணயம், வரையறை.