106-109. மதி எழுவாய், திடனே பயனிலை. 117. ஈரம் - அன்பு 120. காதகர் - கொலையாளர். 111-115. காதலென்னும் ஊழித்தீயின் முன்னே அப்பெண்கள் வார்த்தையை வைப்போமானால் கெடாதபடி நிற்றலு முண்டோ? அப்போது வந்த மனஸ்தாபத்தினால் ஏவப்பட்டுக் கன்னியாயிருப்பேன் பலதேவனைக் கலியாணம் செய்வதினும்) என்று சொன்னாளே யன்றிக் கன்னியாயிருப்பது அவள் மனசுதானோ? (அன்று) 123. அலையடித்தலானது கடற்கரையிலும் மேல் வெளியிலேயுமின்றி ஆழத்திலும் உள்ளுங் கலக்கமில்லை. அவர்க்கிலை யென்றதனால் பெண்களுக்கும் கடற்கும் ஒருங்கே கூட்டியுரைக்கப்பட்டது. (a) கடல் -1. கரை 2, கயம் (b) பெண்கள் - 1. வெளி 2. அகம். 124. கயம் - கஜம், ஆழம். 125. வாட்டமும் மயக்கமும் பெண்களிடத்தே சார்வது அப்பெண்களது நெஞ்சி லெங்கேனும் ஒரு பக்கத்திலேயே யல்லாமல் அவர்களுடைய நெஞ்சினடியில் அன்பும் நினைத்திருப்பதை வெளிவிடாத வலியும், மெய்ம்மையிற் றெளிவும் உள்ளவர்களாக்கும். 127-128. கொள்கை விள்ளாமுரண் கொள்கைகளை விடாது பற்றி நிற்கும் மனவுறுதி. 129. அம்மாதரது நிறையினை நீயறியமாட்டாய். காற்றாடியானது சுற்றிக்கொண்டே இருந்த போதிலும் தன்னுடைய சக்கர நிலையைப் பற்றிக் கொண்டே சுழலும். புருஷர்கள் அப்படியல்ல. இப்பூதலத்தில் மானிடவுருக்கொண்டு திரிகின்ற இக்கொடிய பசாசங்களின் மூலமாகவே பெண்கள் கேடடைவது. இவர்கள் ஆண்பிள்ளைகளா? 142-149. நீண்ட புகழின்கண்ணுள்ள இச்சையானது காற்றாகி நிலை இல்லாத எண்ணத்தை ஆட்டுவிக்க, போனபோன இடங்களிற்போய் நல்லறிவு மில்லாம லலைந்து கெட்டுப்போகாதபடி இல்லறத்தற்குரிய இடமாகி, சிறிய குடாவின் கண்ணே நிலைபெற நிறுத்துவதோர் நங்கூரமாயும், இன்னும் தாங்கள் செய்யுந் தொழில்களைச் செய்யுமாறறியாது மனமிடிந்து அவ்வினையை விட்டு ஆசை செல்லத் தகுந்த எல்லாத் திசைகளிலேயு மலைந்து திரிந்து கெட்டுப்போகாதபடி அவ்வாடவரை நல்வழி செலுத்தி நிறைந்த அன்போடு கூடிய இல்லறத்தின்கண் வாழ்தலையே உள்ள நாள் உள்ளளவும் மனதிற் கொள்ளப்பதித்துச் சிறப்புள்ள நல்ல சுகம் பொருந்திய இடத்திற் கொண்டுவந்து சேர்க்கின்ற சுக்கானாயும் வந்துதவியது மங்கையரன்றோ என்றறிய மாட்டாத மனிதர், மிருகங்களினுங் கீழானவர்களாய் அன்ன பெண்களாற் பெறப்படுகின்ற சிற்றின்பத்தையே கைக்கொண்டு தங்களுடைய இல்வாழ்க்கைத் துணையாய் வந்த அப் பெண்டிரை, ஆழத்துக்குள்ளே இழுத்துக் கொள்ளுகிற சேறாக்குவர். 143. இயக்க - செலுத்த, இயங்க தன்வினை. 144. சென்றுழி - சென்ற இடம். 148. எற்றுண்டு - மோதப்பட்டு. 161. நலிந்து - வருந்தி. 167-190. இவரது அறியாமை எத்தன்மையது - விரும்பிய எவற்றையும் வேண்டக் கொடுக்கும் கற்பக விருட்சமென்று கிஞ்சித்தாயிலும் நினையாது அடியோடு வெட்டித் தள்ளி அவ்வளவையுந் தீயைப் போட்டுச் சுட்டுக் கரியாக்க வேண்டுமென்று நினைந்த கம்மாளனைப் போல் எல்லாந் தனக்கென்றேயபிமானிக்கின்ற ஒப்பற்ற மனத்தினது கோட்டத்தைத் திருத்தி மற்றவ
|