பக்கம் எண் :

மனோன்மணீயம்
196

ருடைய சுகதுக்கங்களையும் நமது சுக துக்கங்களாக அன்பு புரியவும், மெல்லத் தனதுள்ளத்தின் கடும் பற்றினையகற்றி, கமை, சாந்தி முதலிய நற்குணங்கள் படிப்படியாக வளரும்படியாகச் செய்து தன்னுடைய சித்தத்தின் கண்ணேயுள்ள அறிவையும் விளக்கி, நான் என தென்னும் இருவகைப் பற்றினையும் ஓயும்படி செய்து எங்கும் நிறைந்திருக்கவும் தனக்கயலாய் நின்ற பேரின்ப வெள்ளத்தின் கண்ணே முழுகித் திளைக்கும்படி எவரையும் பக்குவப் படு்த்தும் நல்ல பள்ளிக்கூடம் என்று இவ்வில்லறத்தை அறியும் நல்லறிவில்லாமல் ஆவுரிஞ்சு தறையைப்போல் புத்தியில்லாத காரியஞ் செய்யத் தொடங்கித் தம்மையும் பிறரையும் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி வியக்கத் தக்கது.

167. எற்றே - எத்தன்மைத்தோ?

170. முடிபுற - முடிவடைய.

171. கம்மியன் - கொல்லன், கம்மாளன்.

173. மனக்கோள் - மனக்குற்றம், மனக்கோட்டம்.

184. தினவு - ஊறல்.

190. உறையுள் - உறைவிடம்.

[இக்களத்தில் சூரியோதய வருணனையும் இல்லற இயல்பும் கூறினமை காண்க.]

இரண்டாம் அங்கம்.

மூன்றாங் களம்

3. நுதி - நுனி, முனை. (கூரிய)

4. விரகம் - வேட்கை.

5. பரிபுரம் - சிலம்பு. பங்கயம் - தாமரை, இங்கு முதலாகுபெயராய் மலரை யுணர்த்திப் பின் உவமையாகு பெயராய் மலர்போன்ற அடிகளையுணர்த்திற்று. வருந்துபு - வருந்தி. செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

7. விண்ணணங்கு - தேவமகளிர்

12. நவ்வி - அழகு.

17. நனவு - நினைவு, கனவு என்பதன் எதிர்மொழி.

21. முறுவல் - சிரிப்பு.

28. உழுவல் - பேரன்பு, எழுமையுந் தொடர்ந்த அன்பு.

30. வாரி - கடல்.

31. செக்கர் - செவ்வானம்.

32. ஊர்கோள் நாப்பண் - பரிவேட மத்தியில்.

36. அவணின்ற - அவன் நின்ற அல்லது அவண் நின்ற.

41. அயர்க்குமாறிலை - மறக்கும் பாடியாயில்லை.

46. அரசன் க்ஷத்திரியனாயிருந்ததினால் போர் வருங்காலத்தில் எல்லாவற்றையும் மறப்பான்.

(க்ஷத்திரியர்கள் எல்லாவற்றையும் மறப்பது போர் வருங் காலத்திற்றான்.)

51. கயவன் - கீழ்மகன், கைதவன் - பாண்டியன்.

52. போன்மே - போலுமே.

54-60. பொங்குகின்ற அலையையுடைய சமுத்திரத்தாற் சூழப்பட்ட பூமி (எங்கோன்) கீர்த்தியைச் சுமக்கவும் குறுநில மன்னர்கள் தங்கள் குடங்கையில் தலைசாய்த்துத் தாங்கும்படி இடம்பார்க்கும் விசாலம் பொருந்திய வாசலையுடைய மேன்மை பொருந்திய திருநெல்வேலியில்.

56. ஒன்னார் - ஒன்னலர், பகைவர். திகிரி - சக்கரம்.

57. குடங்கை - உள்ளங்கை. குறும்பர் - சிற்றரசர், குறுநில மன்னர்.

60. வேம்பார் - வேப்பம் பூமாலையணிந்த.