55-56. எத்திசையினும் உள்ள மாற்றரசர் தலையை வெட்டிச் சாய்த்துஞ் சக்கராக்ஞையு மெங்குஞ் செல்லும்படி செலுத்தியும், உருட்டு செம்மொழிச்சிலேடை. 66. புல்லார் ஈட்டம் - பகைவர் கூட்டம். 67. அரவின் அரசு - ஆதிசேடன். ஞெரேல் ஒலிக்குறிப்பு. 68. பிறவிக்கடற் பரப்பினும் அகன்றதாக. வறிதா-ஒன்றுமில்லையாம்படி. பௌவம் - கடல். 69. ஆணவம் - மும்மலங்களில் ஒன்று, முற்றும் அழியாதது. 70. உரம் - பலம் 69-73. ஆணவ மலத்தினது ஆழமுங் கூட நாணும்படியாக அகழியொன்று பலமாய்த் தோண்டி அஞ்ஞானத் தொடர்பினும் (பந்தத்தினும்) அதிக முள்ளதாயொத்த மதில் கூட்டங்களைக் காக்கும்படி விஷயப் பொருள்களிலே பாய்ந்து அமிழ்த்தி ஈர்க்கின்ற பஞ்சப் புலன்களைப்போல எண்ணில்லாதனவாகிய யந்திரப் படைகளையு மமைத்து. 78. பாடை - மொழி, பாஷையென்பதன் திரிபு. ஆசாரம் - ஒழுக்கம். 79. சாக்கியம் - சாட்சியம், சான்று. 83. இறுத்து - தங்கி. 84. சதி - வஞ்சனை. 87. வல்லை - விரைவு, உடன். 88. ஈண்டினன் - நெருங்கினன். 91. [இரவியும் திங்களும் சமநிலை வருங்கால் திங்களின் சாயையால் சூரிய கிரகணம் நேரும் என்பது கணித சித்தாந்தம்.] 94-97. அப்படியெதிர்ப்பட்டவர் வேறிடஞ் செல்லாது அந்தப்படியே நிற்பாராயின் இருளும்படியே மூடிக்கொள்ளும் தன்மைபோல நீங்களிருவரும் (சூரிய வமிசத்தனாகிய நீயும் சந்திர வமிசத்தனாகிய எங்கோனும் ) யுத்தஞ் செய்வீராயின் இவ் வுலகந் தாங்கமாட்டாதென்று கருதி இச்சபைக்கு என்ன யேவி. 114. விரை - வாசனை, அளி - வண்டு, இங்கு புருடோத்தமன். மலர் - மனோன்மணி. 118-121. வண்டைக்கொண்டு போய்ப் பூவில் விடுவானேன். குற்றமற்ற காதலானது தலைவன் தலைவியர்க்குத் தானே யுண்டானால் எங்கணாட்டில் கலியாணஞ் செய்வதே தவிர வேறுவித மொன்றுமில்லை. அன்றியும் நமது சிம்மாசனம் இரண்டு பேர்க்கு இடங்கொடாது. 120. கோதறு - குற்றமற்ற 121. வேட்டல் - மணத்தல். 129. அடிஇறை - அடியில் இறையாக, இறை - இறுக்கப்படும் பொருளாகிய வரி, கப்பம். 130. புரவலர் - அரசர், புரத்தலில் வல்லவர். புரத்தல் - காத்தல். 131-132. அவாவிய மங்கலநாண் - விரும்பிய தாலிக் கயிறு. நாணம் - பெண்களுக்குள்ள நாற்குணங்களில் ஒன்று. 143. அரிக்கு - சிங்கத்துக்கு. நேர் - ஒப்பு. 159-161. இப்பலதேவனை யிங்குத் தூது விட்டவன் முற்றும் அறிவிலி. அவனுக்கு (முட்டினபின் குனியும் புத்தி யாதலால்) குட்டிக் காட்டினாலொழிய அறியப்போகிறதில்லை. குட்டிக் காட்டுதல் - போரில் தொலைத்தல். பச்சாத்தாபப்படுத்துவோம் - ஏனிப்படித் தூதனுப்பினோமென்று பரிதாபப்படச் செய்வோம். 161. பச்சாத்தாபம் - கழிந்ததற்கு இரங்குதல், கழிவிரக்கம். 166. இதுகாறு - இதுவரை. 171. மூவர் - திரிமூர்த்திகள் -
|