பக்கம் எண் :

மனோன்மணீயம்
199

மூன்றாம் அங்கம்

இரண்டாங் களம்

1. கடிநகர் - காவல் நகரம்.

3. முடுக்கினும் - விரைவுப்படுத்தினும், துன்று அரா - நெருங்கிய பாம்பு

4. முழுமதி - உவாமதி. காட்சி - தோற்றம். செவ்விது - அழகிது.

3-5. இராகுவாகிய கரும் பாம்பினாற் பிடிக்கப்பட்ட நிறைமதியினது தோற்றத்தினும் அழகிதாகிய பின்னி விடப்பட்டுள்ள கூந்தலையுடைய பேதைமைக் குணமுள்ள வாணியின் இளமை மாறாத முகம்.

6. பணி - தொழில்

9. இம்மை - இப்பிறப்பு.

10. இலக்கு - குறி (Aim)

14. காண்டி. காண்பாய். குறிப்பு - நோக்கம்.

15. அடி - அடியிதழ்.

16. அருத்தி - உண்பித்து, அருந்தி தன்வினை வினையெச்சம்.

18. பராகம் - தாது, பொடி, துகள், பரப்பித்து-பரப்பி, பலம் - பயன்.

19. ஆசு - உள்ளீடு.

20. தூசு - துகில், ஆடை, தோட்டி-துரட்டி.

22. சிறார் - சிறுவர், அண்மைவிளி.

23. புள் - பறவை, அயத்து - குதிரையின் அல்லது ஆட்டின்

26. புலன் - அறிவு.

30. பனிப்ப - துளிக்க.

13-32. [தாவர சிருட்டிகளின் செய்கை விசித்திரங்களிலும் தெய்வ அருள் நிறைந்து கிடக்கும் தன்மையை இவ்வடிகள் விளக்குகின்றன.] புல்லினிடத்து, சிறந்த இடத்துள்ள உணவைப் பெற்று விருந்தினரை அழைத்து அருத்தி வாசனைச் சுண்ணந் தந்து மக்களைப் பெற்று மக்களால் பிறரை ஆடைபற்றி ஈர்த்தும், மக்களைப் புள் முதலியவற்றின் மேல் ஏற்றிப் பல இடங்களுக்கு அனுப்பியும் ஆகும் செயல்கள் ஆரோபிக்கப்பட்டன.

32. என்பு - எலும்பு. திளைப்பர் - அநுபவிப்பர்.

35. விசித்திரம் - அற்புதம்.

41. ஈர்த்து - இழுத்து.

42. முந்நீர்மடு - கடலாகிய பள்ளம்.

43. காலத்தச்சன் - காலமாகிய தச்சன்.

46. அண்டயோனியின் ஆணை - சூரியன் நியமனம் அல்லது கடவுளின் கட்டளை. அண்டம் - உலக உருண்டை. அண்டயோனி - உலக உருண்டைக்குக் காரணமான கடவுள்.

48. தூங்கி - தாழ்ந்து, தொங்கி.

49. பூமியின்குடர் - நிலவெடிப்பு, குடர்-குடல் என்பதன் போலி.

57. எழிலி - மேகம், எழுதலையுடையது.

59. நிரந்தரம் - எப்பொழுதும்.

61. [யான் தடுப்பதால் வரும் காலதாமதத்தையுன்னி நீ இரைகின்றாய் போலும், இனி அழ வேண்டாம் விடுகின்றேன் என்பது பொருள்.]

65. பேறு - பெறுவது, பெறுதல்.

33-65. [பூதபௌதிகங்களாகிய சடபதார்த்தங்களின் சலனங்களினும் (அசைவுகளினும்) விளங்கும் அருள் விசேடத்தை இவ்வரிகள் காட்டுகின்றன.]

67. ஓவாப் பாடு - ஒழியாத் துன்பம்.

68. இவ்வடிப் பொருள் 'சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம், அதனால் உழந்தும் உழவே தலை' குறள் அதி. 104. செய் 3. 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' - குறள் அதி. 104 செய் 3. னுன்ற குறள்களை நினைப் பூட்டுவதாம்.