பக்கம் எண் :

மனோன்மணீயம்
200

73. வேதித்து - பேதித்து, வேறுபடுத்தி.

81. விழு - சிறந்த

82. துதிக்கலம் - போற்றுகிறோமில்லை.

66-82. [கிருமி கீடாதிகளாகிய அற்ப சீவசந்துக்களிடத்திலும் பேரருள் அமைவுற் றிருப்பதை விளக்க எடுத்த இவ்வரிகள் கேவலம் ஓரறிவுயிராகிய நாங்கூழ்ப் புழுவின் செய்கை விசித்திரத்தை வருணிக்கின்றன. புற் பூண்டு கூடவும், முளைப்பதற்குத் தகாத சாரமற்ற மண்ணினையும் நாங்கூழ்ப் புழு மென்று பசைப்படுத்தி வெளிப்படுத்துகின்ற தென்பது சீவசாத்திர நிருணயம் (உயிர்நூற்றுணிபு);அங்ஙனம் வெளிப்படுத்திக் குழிகள் மறையும் போது தன் அதோபாகத்தில் (பிற்பக்கத்தில்) ஒட்டியிருக்கும் ஒரு உருளை மண்ணால் நாங்கூழ்ப்புழு அக்குழித் துவாரத்தை அடைத்துக் கொள்வது கவனித்தால், யாரும் காணலாம்.]

85. வாணாள் என்னே - வாழ்நாள் பயனற்றது என்றபடி.

86. அலகு - எல்லை இலகிய - விளங்கிய.

87. கதிர் - கிரணம்.

88. சிற்றாடி - சிறு கண்ணாடி [சூரிய கிரணங்களை ஒன்று சேர்த்து அக்கினி விளைவிக்கும் சிறுகண்ணாடி. (Hand Lens)மையம் - நடுவிடம் (Focus)].

86-89. உலகில் பரந்து கிடக்கும் பொருள் தன்மைகளாகிய வெய்யோன் கதிர்களைத் திரட்டிக் கூடும்படி வைத்ததொரு சிற்றாடியின் மையத்தை ஒத்த மனத்தையும் உடம்பையும் பெற்றும் சிலர் தீயநெறி செல்கின்றனர்.

90. தீயன் - பலதேவன்.

91. சினக் கனல் - கோபத்தீ.

92. கிருபணன் - லோபி. தீனன - ஏழை.

93. மங்குல் - மேகம்.

94. படாம் - துகில்.

95. பொதியில் - பொதியமலை, பொதுவில் என்பதன் போலி. பொற்பு - அழகு. கரு-பொன் உருக்கி வார்க்கப்படுமிடம், ஈண்டு முகடே கருவாம்.

97. ஆடகம் - பொன்.

100. துவண்டு - அசைந்து. துவள்-பகுதி.

101. பதாகையின் தொகுதி - கொடிக் கூட்டம்.

வஞ்சித் தாழிசை யாவது இரு சீராலாகிய அடிநான்கையுடைய செய்யுள், ஒரு பொருள்மேல் மூன்றாய் வருவது.

வஞ்சித் தாழிசை 1. அரிகாள் - பகைவர்களே! சஞ்சிதம் - மிஞ்சியிருப்பது. ஓருயிர் செய்த வினைப் பலன்களை அவ்வுயிர் நுகரும் பொருட்டு எடுக்கும் பிறப்பில் நுகரக் கொடுப்பதாகிய பலன் பிராரத்துவம் என்றும், அப்பிறப்பிற் செய்யும் வினைப்பலன் ஆகாமியம் என்றும், எடுக்கும் பிறப்பில் நுகரக் கொடுக்கப்பட்டதுபோக மிஞ்சியிருக்கும் பலன் சஞ்சிதம் என்றும் சொல்லப்படும்.

2. மஞ்சுளம் - அழகு. கடிஞை - பிச்சைப் பாத்திரம்.

3. எள் - தர்ப்பண எள். துஞ்சிய பிதிர்க் கூட்டம் - இறந்து போன மாதாபிதாக்கள் முதலியோர்.

109. வயம் - வெற்றி.

111. வஞ்சித் தொடை - வஞ்சிப்பூமாலை, இது போருக்குச் செல்வோர் அணியும் மாலை, தொடை - தொடுக்கப்படுவது. தண்ணுமை - மத்தளம்.

112. பொருவு - ஒத்த.

113. உருமு - இடி.

117. வேட்டல் - மணத்தல்.