பக்கம் எண் :

மனோன்மணீயம்
201

வேள் - பகுதி.

118. குரம் - காற்குளம்பு.

120. விலோதனம் - கொடி.

122. அசலத்திரள் - மலைபோன்ற தேர்க்கூட்டம்.

119-122. கொய்யுளைத் திரைக் கடற் கூட்டம் - குதிரைகள் கூட்டம். மதம்பெய் மைம்முகிலீட்டம் - யானைக் கூட்டம்.

123. நெல்லை - நெல்வேலி, மரூஉ.

124. அந்தோ அந்தோ - அடுக்கு, இரக்கம்பற்றியது.

144. ஆதித்தவாரம் - ஞாயிற்றுக்கிழமை.

147. ஆமைப்பலகை - ஆமை வடிவாகச் செய்யப்பட்ட பலகை, கூர்மாசனம், கூர்மம் - ஆமை.

172. காக்கைச் சுப்பன் - (இரும்படிராமன்) கிராமாந்தரப் பெயர்.

185. குடகன் - சேரன்.

192. படியோர் - உலகினர்.

197. திருவார் - ஆர் ஒப்புப் பொருள்.

202. தேற்றம் - தெளிவு.

203. சுகம் - கிளி.

209. அங்காடி - கடைத்தெரு.

211. புரை - ஒட்டை, துவாரம், துளை.

213. அந்தரங்கம் இரகசியம், அருமறை.

215. உழையுளார் - பக்க மிருப்போர், மந்திரி முதலியோர்.

[இக்களத்தில் சூரியாத்தமனமும் சராசரங்களிற் றோற்றும் திருவருள் வைபவமும், ஒருவாறு வருணித்தமை காண்க.]

மூன்றாம் அங்கம்

மூன்றாம் களம்.

1. நள்ளிரா - நடுநிசி.

4. இருப்பல்- இருப்பேன். அல் ஈற்று வினைமுற்று.

11. கையறு - செயலற்ற. (மிகுந்த) துன்பநிலை.

13. அரவம் - சத்தம்.

15. கீண்டல் - கிளறுதல், கீள் பகுதி.

23. கண்ணுளார் - கண்ணுக்குளிருக்கின்றார்.

25. எண்ணவும் படாஅர் - நினைக்கப்படவு மாட்டார். எண்ணுருளும் உளார் - நினைக்கப்படவு மிருக்கின்றார், மதிக்கப்படுதலுமுள்ளவர்.

29. சித்திரரேகை - சித்திரலேகை, வாணாசுரன் மகள் உஷையின் தோழி.

32. பாடு - துன்பம்.

34. உளை - உள்ளாய்.

34. [கண்டு பழகும் பாக்கியம் நாம் பெற்றிலேம் என்பது கருத்து.]

36. தேக்கிய - தங்கிய.

37. ஒவ்வும் - பொருந்தும்.

சிவகாமி சரிதம் உரை

1. மௌனம் - வாய் பேசாமையும் மனம் விடயத்திற் செல்லாதிருத்தலும். இது மோனம் என்று வழங்கப்பெறும். 'மோனம் என்பது ஞான வரம்பு' என்பது ஒளவை அருண் மொழி. ’ம் - தபம்;தபித்தல் அதாவது ஒறுத்தல் - வருத்துதல் மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கலும் கோடைக் காலத்தில் வெயிலில் நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல் தவமாம். சுழன்று - சுற்றி;சுழல் பகுதி. தான் உண்மைக் காதலனை