ராவால்" என்ற பெருமாள் திருமொழியடியின் கருத்தமைதி கொண்டது. 85-87. 'நீரளவே யாகுமாம் நீராம்பல். இது, "வெள்ளத்தனைய மலர் நீட்டம்" குறள் அதி. 60 செ. 5 என்ற அடிக்கருத்து. அம்புயம் - அம்பு + ஜம் - நீரில் தோன்றுவது. 89. எவ்வும் - உயரும், எழும். 96. ஊழையும் - வினைப்பயனையும். 112. தேறுமாறு - தெளியும்விதம். 185. மடங்கல் - சிங்கம். 208-209. அருள் முதலியன அகம் முதலியனவாக உருவகிக்கப்பட்டுள்ளன. 219. நிம்பமாலை - வேப்பந்தார், இது பாண்டியற்குரிய மாலை. 222. மட்பரி - மண் குதிரை. 242-243. நொச்சி - பகைவர்க்கு எதிரில் நிலைநின்று தம்மதில் காப்போர்க்கு உரிய பூமாலை. உழிஞை - மதிலை முற்றுகை செய்யும் வீரர் அணியும் பூ. 263. ஒல்கலை - தளராதே. 264-265. "சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின், பட்டுப்பாடுன்றுங் களிறு" குறள் அதி. 60. செ. 7. உம்பல் - ஆண் யானை. 270-271. "நாணகத் தில்லாரியக்கம் மரப்பாவை, நாணால் உயிர். மருட்டியற்று" குறள் அதி. 102, செ. 10. 272-273. "ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று" குறள் அதி. 97 செ.7. 282. இருமுறை - போர்க்களத்திலும், தற்கொலை புரிய எத்தனித்த போதும். தப்பிலி - தப்புதலுள்ளவன், தப்புதலில்லாதவன். 290. பகைக்கலை - விரோதம்பண்ணாதே. 291 [பிரியப்படுகை - காமித்தல். காமவழி நேரிட்ட பகையாதலால்.] 296. நிணம்படும் - கொழுப்புப் பொருந்திய. 297. மிண்டலைவறிதே - வீணாகப் பேசாதே. மிண்டுதல் - மதத்தால் அடர்த்தல். 302. உபாயமிங்கிது - நாராயணன் மீது குற்றம் ஏற்றுதலை. [இக்களத்தில் ஜீவகன் சோகமும் குடிலனுடைய தந்திர நடவடிக்கையும், பலதேவனுடைய கீழ்ப்படியாத் துர்க்குணமும், ஒருவாறு விளங்கலாம்.] நான்காம் அங்கம் நான்காம் களம் 1. ஆதி - முற்காலம். 2. தொழுகுலம் - எவரும் வணங்கத்தக்க சிறந்த குலம். 5. [தையலர் - மனோன்மணியின் செவிலி முதலிய அந்தப்புரத்தார்.] 6. அகழ் - கிடங்கு, தோண்டப்பட்டது. 9. களைகுதும் - களைவோம், தும் ஈற்றுத் தன்மைப்பன்மை. 16. ஆதியர் - முதன்மையானவர், தலைசிறந்தவர். 28. கருதலர் - கருதமாட்டார். 69. இவுளி - குதிரை. 70. கடகயம் - மதயானை. 71. கைக்குட்கனி - கையிலிருக்கும் நெல்லிக்கனிபோல் தெளிவாய். 89. குடிலன் - வஞ்சகன். 90. பகடி - கேலி. 106. [இது பலதேவனுடைய சோர காதலியின் சகோதரன் பலதே
|