வனை வேலால் குத்தியபோது கூறியமொழி.] 107. உரத்து - மார்பில் 108. பொன்றினன் - இறந்தான்;பொன்று - பகுதி. 112. [கூலி - கைக்கூலி.Bribe.] 124. மேலரும் - பொருந்துதற்கரிய. 126. ஓவலில் - நீங்குதலில்லாத. 144. ஒவ்வும் - பொருந்தும். 160. [கொக் கொக் - சடையனுடைய விக்கலால் எழும் ஓசை.] 198. நடுமயிர்த் தூக்கின் - நடுவிற் கட்டியிறக்கிய மயிர் உறியைப் போலும். 220. இரந்தேன் - வேண்டினேன். 231. அற்றம் - ஈறு, முடிவு. 253. வல்லை - விரைவு. 277. சேய் - குழந்தை. [இக் களத்தில் குடிலன் நாராயணன் மேல் பொய்க்குற்றம் சாட்டி நிலைநிறுத்திய தந்திரமும் இராஜபக்தியின் இயல்பும் வெளியாகின்றன.] நான்காம் அங்கம் ஐந்தாம் களம் 1. வளையும் வேய - வளையுந் தன்மையுடைய மூங்கில். நெடுமரம் - பெருமரம் - வளையாதமரம். 2. கிளை - கிளைகள், பெருங்கொம்பு, கிளைத்தலையுடையது, தொழிலாகுபெயர். கிளர்காற்று - பெருங்காற்று. வலிய பகைவர்முன் வணங்கியவர் பின் ஒருகாலத்தில் உயர்வு பெறுவர் என்ற உபதேசத்தை விளக்குவது 1-2 அடிகளின் உபமானம். 3. முளை - மூங்கில். மூங்கில் புறக்காழ தாதலின் புல்லினத்தைச் சார்வது, மரமானது அகக்காழது. 6. இறினும் - கெடினும். 8. காழ் - வைரம், உறுதி. நாணமில் நாணல் - அபாயம் வரும் பொழுது வணங்குதலால் நாணமில்லாத நாணற்புல், நதிவேகத்தில் எதி்ர்ப்படும் நாணல் என்பது அறிஞர் உரை. 23. மலைவு - மயக்கம், மான - போல. 26. துயர்க்கணம் - கணம் - கூட்டம், பல துயர்கள் என்றபடி. 30. மாநிதிவழிஞர் - பெருஞ்செல்வத்தோடு பிரயாணஞ் செய்யும் வர்த்தகர்கள். 31. ஆர்கலன் - பொருந்திய மரக்கலம். புயல்கால் - மழைக்காற்று அல்லது பெருங்காற்று. 32. தியங்குமேல் - தியங்குமானால், கலங்குமானால். மீகான் - மீகாமன், கப்பலோட்டி. 35. வதிந்து - தங்கி. 37. ஒன்றுவன் - பொருந்துவன். 38. உழையுளார் - பக்கமுள்ளவர் அல்லது கலத்திடமிருப்பவர்கள். 44. திமில் - மரக்கலம் (அரசாட்சி). 46. பாய்மரம், ஈண்டு குடிலன். 49. [கைவழி (channel)சிறுபாதை, கை - சிறுமை.] 50. தொல் - பழமை. 51. துவாத சாந்தத்துறை - பூலோக வடிவாம் விராட் புருடனுக்கும் பிரமரந்திரத்துக்கும் மேலுள்ளதோரிடமாகிய மதுரை. துவா+தச+அந்தம் - இரண்டு+பத்து+முடிவு - புருவமத்திக்குமேல் பன்னிரண்டு விரற்கிடையுள்ள இடம். 52. நிவாதம் - வாதம் இல்லாதது, காற்றற்ற இடம், நிவாஸம் என்ற சொல்லின் திரிபாகக் கொள்ளின்
|