மனோன்மணீயம்
15

டோத்தமன் கோபம் கொண்டு போர்கோலம்பூண்டு பாண்டிநாட்டின்மேற் படையெடுத்துப் புறப்பட்டான். அச்செய்தியறிந்து ஜீவகனும் போருக்கு ஆயத்தமாகவே இருபடையும் திருநெல்வேலிக் கெதிரிலே கைகலந்தன. அப்படிப் போர் நடக்கும்போது பாண்டியன் சேனையின் ஒரு வியூகத்திற்குத் தலைவனாக இருந்த பலதேவனை அவன் கீழிருந்த ஒருசேவகன் தன் வேலாலே தாக்க, அதனால் அவன் மூர்ச்சிக்கவும் படைமுழுதும் குழம்பவும் சங்கதி ஆயிற்று. அப்படித் தாக்க நேரிட்ட காரண மேதென்றால், பல தேவன் களவுவழிக் காமம் துய்க்கும் துன்மார்க்கனாதலால் அப்படைஞனது சகோதரியைக் கற்பழித்துக் கெடுத்துவிட்டதுபற்றி யுண்டான வைரமே என்பது, படைஞன் வேலாற் பலதேவனைத் தாக்கியபொழுது கூறிய வன்மொழியாலும் அவன் தங்கைக்கு அரண்மனையினின்றும் பலதேவன் திருடிப் பரிசாக அளித்த ஒரு பொற்றொடி அவன் கையில் அக்காலம் இருந்தமையாலும் வெளிப்படுகின்றது. படைநியதி கடந்த அச்சேவகனை யருகுநின்ற வீரர் அக்கணமே கொன்று விட்டார்கள். பலதேவனும் மூர்ச்சை தெளிந்துகொண்டான். ஆயினும் படையிற் பிறந்த குழப்பம் தணியாது பெருகி விட்டதனால் பாண்டியன் சேனை சின்னபின்னப்பட்டுச் சிதறுண்டு ஜீவகன் உயி்ர்தப்புவதும் அரிதாகும்படி தோல்வி நேர்ந்தது. சத்தியவாதியாகிய நாராயணன் என்னும் ஒரு சுத்தவீரன் அக்காலம் வந்து உதவி செய்யாவிடில் அப்போர்க்களத்தில் ஜீவகன் மாண்டேயிருப்பன்.

9. இந்நாராயணன் யாரென்றால் நடராஜனுடைய நண்பன். இவன் குடிலனுடைய சூதுகள் தெரிந்தவன். அரசன் நிந்தித்துத் தள்ளினும் அவனைக் காப்பாற்றும் பொருட்டு அவனை விட்டு நீங்காது மதுரையினின்றும் அவனோடு தொடர்ந்து வந்த பரோபகாரி. குடிலன் இவன் திறமும் மெய்ம்மையும் அறிந்துளானாதலால், இந்நாராயணன் போர்முகத்திருக்கில், தான் எண்ணியபடி ஜீவகனுயிருக்குக் கேடுவரவொட்டான் எனக் கருதி, சண்டையாரம்பிக்கு முன்னமே அவனைக் கோட்டைக்காவலுக்காக நியமித்தனுப்பினான். ஆயினும் போர்க்களமே கண்ணாக இருந்த நாராயணன் சேனையிற் குழப்பம் பிறந்தது கண்டு சில குதிரைப் படைகளைத் திரட்டிக்கொண்டு திடீரென்று பாய்ந்துசென்று