மனோன்மணீயம்
16

அரசனையும் எஞ்சின சேவகரையும் காப்பாற்றிக் கோட்டைக்குட் கொண்டு வந்து விடுத்தான். சுத்தவீரனாகிய அரசன் இங்ஙனம் தான் பகைவருக்கு முதுகி்ட்ட இழிவை நினைந்து நினைந்து துக்கமும் வெட்கமும் தூண்டவே தற்கொலைபுரிய யத்தனிக்கும் எல்லை நாராயணன் மனோன்மணியது ஆதரவின்மையை அரசனுக்கு நினைப்பூட்டி அக்கொடுந் தொழிலிலிருந்து விலக்கிக் காத்தான். அவனது நயவுரையால் அரசன் ஒருவாறு தெளிவடைந்திருக்கும் போது சேரன்விடுத்த ஒரு தூதுவன் வந்து, ஒருகுடம் தாமிரவர்ணி நீரும் ஓர் வேப்பந்தாரும் போரிலே தோற்றதற்கு அறிகுறியாகக் கொடுத்தால் சமர் நிறுத்துவதாகவும், அன்றேல் மறுநாட்காலையிற் கோட்டை முதலிய யாவும் வெற்றிடமாம்படி தும்பை சூடிப் போர்முடிப்பதாகவும் கூறினான். போரில் ஒரு முறை தான் புறங்கொடுத்த புகழ்க்கெடுதியை உயிர் விடுத்தேனும் நீக்கத் துணிவுகொண்ட ஜீவகன் அதற்குடன்படாமல் மறுத்துவிட்டு, பின்னும் சமருக்கே யத்தனித்துத் தனது அரண்களைச் சோதித்து நோக்குங்கால் அவை ஒருநாள் முற்றுகைக்கேனும் தகுதியற்றபடி அழிந்திருப்பதைக் கண்ணுற்று, அவ்வளவாகத் தன் படைமுற்றும் தோற்க நேரிட்ட காரணம் குடிலனோடு வினாவ லாயினான். தன் கருத்திற் கெதிராக அரசனைக் காப்பாற்றி வரும் நாராயணன்மேற் றனக்குள்ள பழம்பகை முடிக்க இதுவே தருணம் எனக் கண்டு அரண் காவலுக்கு நியமிக்கப்பட்ட நாராயணன் காவல் விடுத்துக் கடமை மீறி யுத்தகளம் வந்ததே காரணமாகக் காட்டிக் கோப மூட்டிப் படையிற் பிறந்த குழப்பத்திற்கு ஏதுவாகப் பலதேவனை ஒரு சேவகன் வேலாற்றாக்கினதும் தெரிவித்து, அதுவும் வியுகத் தலைவனாக ஆக்கப்பெறாத பொறாமையால் நாராயணன் ஏவி விட்ட காரியமே எனவும் அத்தொழிலிற்குப் பரிசாக அவன் அரண்மனையினின்றும் திருடிக்கொடுத்ததே அவன் கையிலிருந்த அரண்மனை முத்திரை பொறித்த பொற்றொடி எனவும் குடிலன் ஒரு பொய்க் கதை கட்டி அதனை அரசன் நம்பும்படி செய்தான். அவ்வாறே களவுபோலை ஆஞ்ஞாலங்கனம் முதலிய குற்றங்களை நாராயணன்மேற் சுமத்தி அவற்றிற்காக அவனைக் கழுவேற்றும்படி விதியும் பிறந்தது.

10. இத்தருணத்தில் சுந்தரமுனிவர் அத்தியந்த ஆவசிகமான ஓரிரகசியாலோசனைக்கு அரசனை யழைப்பதாகச் செய்தி