வந்தமையால் நாராயணனை அவ்விதிப்படி கழுவேற்ற வில்லை. முனிவர் இப்போது வந்த காரணம் என்ன வென்றால், ஜீவகன் குடிலன் வசத்தனாய் நெல்வேலிக் கோட்டையே சாசுவத மென இறுமாந் திருந்தமை கண்டு பரிதாபம் கொண்டு, தமக்கென இரந்து வேண்டிக் கொண்ட அறைமுதல், தம தாச்சிரமவெளிவரையும், ஆபத்காலோபயோகமாக அதிரகசியமான ஒரு சுருங்கையுழைத்துச் சமைத்துக்கொண்டு, பற்றுக்கோடற்று நின்ற ஜீவகனையும் அவன் மகனையும் கேடுற்ற கோட்டையினின்றும் தமது ஆச்சிரமத்திற்கு அச்சுருங்கைவழி யழைத்துச் செல்ல வுன்னியே சுந்தரர் இத்தருணம் எழுந்தருளினர். கோட்டையின் நிலையாமையுணர்ந்தும் அதின்மேல் வைத்த அபிமானம் ஒழியாமையால் அஃதுடன் தான் முடியினும் இன்னும் ஒருமுறை போருக் கஞ்சிப் புறங்கொடுத்தல் தகாதென ஜீவகன் துணிந்து மறுக்க, மனோன்மணி, பாண்டியர் குலத்திற்கு ஏக சந்ததியாக இருப்பதனால் மற்றையர் எக்கேடுறினும் அவளையேனும் காப்பாற்றுதல் தம் கடமை யென ஒரு தலையா ஒறுத்து முனிவர் கூற, மன்னவன் அங்ஙனம் இயைந்து நடுநிசியில் முனிவரோடு தன் மகளை ஆச்சிரமம் அனுப்புவதாக ஒப்புக் கொண்டான். முனிவரும் சம்மதித்து அகன்றார். உடனே நிசாமுகம் தோன்றிற்று. யூன் அருமை மகளைப் பிரியும் வருத்தம் ஒரு புறமும் பிரியாதிருக்கில் அவட்குண்டாம் கெடுதியைக் குறித்த அச்சம் மற்றொரு புறமாக ஜீவகன் சித்தத்தைப் பிடித் தலைக்கக் கலக்கமுற்று, குருமொழியிலும் ஐயம் பிறந்து, குடிலனை வரவழைத்து, முனிவர் அதிரகசியமாகக் கூறிய சுருங்கை முதல் சகல சங்கதியும் தெரிவித்து அவனது அபிப்பிராயம் உசாவுவா னாயினன். அதற்கு அப்பாதகன் இதுவே தன் மனக்கோள் நிறைவேற்றற்குரிய காலமெனத் துணிந்துகொண்டு மனோன்மணியை யிடர்பெயர்ப்பது தற்கால நிலைமைக்கு எவ்விஷயத்திலும் உத்தம மெனவும், ஆயினும் மணவினை முடியா முன்னம் அனுப்புதலால், கன்னியாகிய அவளுக்குப் பழிப்புரைக் கிடமாவதே யல்லால் அரசனுக்குச் சற்றும் சித்த சமாதானத்திற் கிடமில்லை யெனவும் அவன் நெஞ்சில் சஞ்சலம் விளைவித்து, ஜீவகன் தானாகவே பலதேவனுக்கு மனோன்மணியை அன்றிரவே கலியாணம் செய்து கொடுத்து முனிவர் ஆச்சிரமத்திற்கு மகளையும் மருமகனையும் சேர்த்து அனுப்புவதாகத் துணியும்படி தூண்டிவிட்டு,
|